லீ ட்சான்சூ

லீ ட்சான்சூ

லீ ட்சான்சூ, ஆண், ஹான் இனத்தவர். 1950ஆம் ஆண்டு ஆக்ஸ்டு திங்கள் பிறந்தார். ஹேபெய் மாநிலத்தின் பிங்ஷான் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1972ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பணி புரியத் தொடங்கினார். 1975ஆம் ஆண்டு ஏப்ரல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பணியில் இருந்தவாறே, ஹேபெய் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் இரவுப் பள்ளியில் அரசியல் கல்வித் துறையில் படித்தார். தவிரவும். வணிக மேலாண்மை துறையில் முதுகலை பட்டமும் பெற்றவராவார்.

தற்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், சீனக் கன்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது அலுவலகத்தின் இயக்குநர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டித் தேசியப் பாதுகாப்பு ஆணைய அலுவலகத்தின் இயக்குநர், சீனக் கன்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள நிறுவனங்களின் பணிக் குழுச் செயலாளர் ஆகிய பதவிகளை ஏற்றுள்ளார்.

1971-1972, ஹேபெய் மாநிலத்தின் ஷிஜியாட்சுவாங் மாவட்ட நிதி மற்றும் வர்த்தகப் பள்ளியில் பொருள் விலைவாசித் துறையில் படித்தார்

1972-1976, ஹேபெய் மாநிலத்தின் ஷிஜியாட்சுவாங் மாவட்ட வணிக வாரிய அலுலகத்தின் நிர்வாகச் செயலாளர் மற்றும் துணைத் தலைவர்

1976-1983, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹேபெய் மாநிலம் ஷிஜியாட்சுவாங் மாவட்டக் குழு அலுலகத்தின் தகவல் பிரிவின் நிர்வாகச் செயலாளர் மற்றும் தலைவர்(இதற்கிடையில், 1980-1983ஆம் ஆண்டு ஹேபெய் ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தில் இரவுக் கல்லூரியின் அரசியல் கல்வித் துறையில் படித்தார்)

1983-1985, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹெபெய் மாநிலத்தின் வுஜி வட்டக் குழுச் செயலாளர்

1985-1986, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹேபெய் மாநிலத்தின் ஷிஜியாஜுவங் மாவட்டக் குழுவின் துணைச் செயலாளர் மற்றும் ஆணையர்

1986-1990, சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக்கின் ஹேபெய் மாநிலக் குழுவின் செயலாளர்(இதற்கிடையில், 1988, பிப்ரவரி முதல் 1988 ஆகஸ்டு வரை, சீனக் கம்யூனிஸ் கட்சி மத்திய கமிட்டியின் கட்சிக் கல்லூரியின் கட்சிக் கட்டுமானக் கோட்பாடு குறித்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றார்)

1990-1993, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹேபெய் மாநிலத்திலுள்ள ச்செங்டே மாவட்டக் குழுவின் துணைச் செயலாலர் மற்றும் ஆணையர்

1993-1997, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹேபெய் மாநிலக் குழுவின் நிரந்தர உறுப்பினர் மற்றும் தலைமைச் செயலாளர்

(1992 முதல் 1994 வரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிக் கட்சிக் கல்லூரியின் பொருளாதாரத் துறையில் அஞ்சல் வழி கல்வி கற்றார்)

1997-1998, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹேபெய் மாநிலக் குழுவின் நிரந்தர உறுப்பினர், கிராமப்புறப் பணிக்கான தலைமைக் குழுவின் துணைத் தலைவர்

1998-2000, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஷான்சி மாநிலக் குழுவின் நிரந்தர உறுப்பினர், கிராமப்புறப் பணிக்கான தலைமைக் குழுவின் துணைத் தலைவர், இத்தலைமைக் குழு அலுவலகத்தின் இயக்குநர்.(இதற்கிடையில், 1996 முதல் 1998 வரை சீன சமூக அறிவியல் கழகத்தின் முதுகலைக் கல்லூரியின் நிதி மற்றும் வர்த்தக துறையின் வணிக பொருளாதாரக் கல்விப் பிரிவில் படித்தார்)

2000-2002, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஷான்சி மாநிலக் குழுவின் நிரந்தர உறுப்பினர் மற்றும் அமைப்புத் துறைத் தலைவர்

2002-2003, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஷான்சி மாநிலக் குழுவின் துணைச் செயலாளர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிஆன் மாநகராட்சிக் குழுச் செயலாளர், சிஆன் மக்கள் பேரவை நிரந்தர குழுத் தலைவர்

2003-2004, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹெலௌங்ஜியாங் மாநிலக் குழுவின் துணைச் செயலாளர்

2004-2007, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹெலௌங்ஜியாங் மாநிலக் குழுவின் துணைச் செயலாளர், மாநிலத் துணைத் தலைவர்(இதற்கிடையில், 2005 முதல் 2007 வரை ஹார்பின் தொழில் நுட்பப் பல்கலைகழகத்தின் வணிக மேலாண்மைத் துறையில் படித்து, முழுகலைப் பட்டம் பெற்றார்)

2007-2008, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹெலௌங்ஜியாங் மாநிலக் குழுவின் துணைச் செயலாளர், தற்காலிக மாநிலத் தலைவர்

2008-2010, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹெலௌங்ஜியாங் மாநிலக் குழுவின் துணைச் செயலாளர், மாநிலத் தலைவர்

2010-2012, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குய்சோ மாநிலக் குழுவின் செயலாளர், மாநில மக்கள் பேரவை நிரந்தர குழுத் தலைவர்

2012-2012, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது அலுலகத்தின் வழமைப் பணிக்கான துணைத் தலைவர்(அமைச்சர் நிலை), சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது அலுவலக இயக்குநர், நேரடியாக சீனக் கம்யூனிஸ் கட்சி மத்திய கமிட்டியின் கீழுள்ள நிறுவனங்களின் பணிக் குழுச் செயலாளர், குய்சோ மாநில மக்கள் பேரவை நிரந்தர குழுத் தலைவர்

2012-2014, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிச் செயலகத்தின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது அலுவலகத்தின் இயக்குநர், நேரடியாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கீழுள்ள நிறுவனங்களின் பணிக் குழுச் செயலாளர்

2014-2017, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிச் செயலகத்தின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது அலுவலகத்தின் இயக்குநர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டித் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் அலுவலகத் தலைவர், நேரடியாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கீழுள்ள நிறுவனங்களின் பணிக் குழுச் செயலாளர்

2017 முதல் இதுவரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது அலுவலக இயக்குநர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டித் தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் அலுவலகத் தலைவர், நேரடியாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கீழுள்ள நிறுவனங்களின் பணிபுரியும் குழுச் செயலாளர்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16 மற்றும் 17ஆவது மத்திய கமிட்டியின் மாற்று உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 மற்றும் 19ஆவது மத்திய கமிட்டியின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது மத்திய கமிட்டி அரசியல் குழு மற்றும் செயலகத்தின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினர் மற்றும் நிரந்தர உறுப்பினர்.