வாங் யாங்

வாங் யாங்

வாங் யாங், ஆண், ஹான் இனத்தவர். 1955ம் ஆண்டு மார்ச் திங்களில் பிறந்தார். ஆன்ஹூய் மாநிலத்தின் சூ சோ நகரைச் சேர்ந்தவர். 1972ஆம் ஆண்டு ஜூன் திங்கள் பணிபுரியத் தொடங்கினார். 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி கல்லூரியிலிருந்து இளங்கலை பட்டமும், பொறியியலின் முதுகலைப் பட்டமும் பெற்றவர் ஆவார்.

தற்போது அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினராகவும், சீன அரசவையின் துணைத் தலைமையமைச்சர் மற்றும் கட்சிக் குழு உறுப்பினராகப் பதவி ஏற்றுள்ளார்.

1972-1976, ஆன்ஹுய் மாநிலத்தின் சூ மாவட்டத்தின் உணவு தொழிற்சாலையின் தொழிலாளர் மற்றும் பணியகத்தின் தலைவர்

1976-1979, ஆன்ஹூய் மாநிலத்தின் சூ மாவட்டத்தின் மே 7 ஊழியர் பள்ளியின் ஆசிரியர், கற்பித்தல் மற்றும் ஆய்வுப் பிரிவின் துணை தலைவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இக்கல்லூரியின் கட்சி குழு உறுப்பினர்

1979-1980, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி கல்லூரியின் தத்துவப் பிரச்சார ஊழியர் வகுப்பில் அரசியல் பொருளியல் துறையில் கல்வி பயின்றார்

1980-1981, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆன்ஹுய் மாநிலத்தின் சூ மாவட்ட கமிட்டியின் கட்சி கல்லூரியின் ஆசிரியர்

1981-1982, சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக்கின் ஆன்ஹுய் மாநிலத்தின் சூ மாவட்ட கமிட்டியின் துணைச் செயலாளர்

1982-1983, சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக்கின் ஆன்ஹுய் மாநில கமிட்டியின் பிரச்சாரத் துறை அமைச்சர்

1983-1984, சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக்கின் ஆன்ஹுய் மாநில கமிட்டியின் துணைச் செயலாளர்

1984-1987, ஆன்ஹுய் மாநிலத்தின் விளையாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவ்விளையாட்டு ஆணையத்தின் கட்சிக்குழு துணைச் செயலாளர்

1987-1988, ஆன்ஹுய் மாநிலத்தின் விளையாட்டு ஆணையத்தின் தலைவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவ்விளையாட்டு ஆணையத்தின் கட்சிக்குழு செயலாளர்

1988-1992, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்ஹூய் மாநிலத்தின் துங் லிங் நகரக் கட்சி குழுவின் துணைச் செயலாளர், தற்காலிக நகராட்சித் தலைவர், நகராட்சித் தலைவர்

(1989-1992 சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கட்சி கல்லூரியின் அஞ்சல் வழிக் கல்விக் கழகத்தின் இளங்கலை பட்ட வகுப்பின் கட்சி மற்றும் அரசியல் விவகார நிர்வாகத் துறையில் கல்வி பயின்றார்)

1992-1993, ஆன்ஹுய் மாநிலத்தின் திட்ட ஆணையத்தின் தலைவர், இந்த ஆணையத்தின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கட்சிக்குழுச் செயலாளர், மாநிலத் தலைவரின் உதவியாளர்

1993-1993, ஆன்ஹுய் மாநிலத்தின் துணைத் தலைவர்

1993-1998, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆன்ஹுய் மாநிலக் கட்சி குழுவின் நிரந்தர உறுப்பினர், மாநிலத்தின் துணைத் தலைவர்

(1993-1995 சீன அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அறிவியல் பிரிவின் நிர்வாக அறிவியல் சிறப்புத் துறை முதுகலை பட்டப்படிப்பு மாணவர், பொறியியலின் முதுகலை பட்டம் பெற்றார்; 1997 மார்ச் முதல்-1997 மே வரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி கல்லூரியின் மாநில நிலை ஊழியர் மேற்படிப்பு வகுப்பு மாணவர்)

1998-1999, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆன்ஹுய் மாநிலக் கட்சி குழுவின் துணைச் செயலாளர், மாநிலத்தின் துணைத் தலைவர்

1999-2003, சீனத் தேசிய வளர்ச்சி திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர், கட்சிக் குழு உறுப்பினர்

(2001 செப்டம்பர் முதல்-2001 நவம்பர் வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி கல்லூரியின் மாநில மற்றும் அமைச்சர் நிலை ஊழியர் மேற்படிப்பு வகுப்பு மாணவர்)

2003-2005, சீன அரசவையின் துணைச் செயலாளர்(அரசவை அலுவலகத்தின் நிரந்தர பணிக்குப் பொறுப்பேற்றார், அமைச்சர் நிலை பதவி), அலுவலகக் கட்சி குழுவின் துணைச் செயலாளர்

2005-2006, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சொங் சிங் மாநகரின் கட்சி குழுச் செயலாளர்

2006-2007, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சொங் சிங் மாநகரின் கட்சி குழுச் செயலாளர், மாநகரின் மக்கள் பேரவை நிரந்தரக் குழுவின் தலைவர்

2007-2007, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினர், கட்சியின் சுங் சிங் மாநகரின் கட்சி குழுச்செயலாளர், மாநகரின் மக்கள் பேரவை நிரந்தரக் குழுத் தலைவர்

2007-2012, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினர், கட்சியின் குவாங் டொங் மாநிலக் கட்சி குழுச் செயலாளர்

2012-2013, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினர்

2013-2017 சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினர், துணைத் தலைமையமைச்சர், கட்சிக் குழு உறுப்பினர்

2017 முதல் இது வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், துணைத் தலைமையைச்சர், கட்சிக் குழு உறுப்பினர்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16ஆவது மத்திய கமிட்டியின் மாற்று உறுப்பினர், 17ஆவது மத்திய கமிட்டி, 18ஆவது மத்திய கமிட்டி மற்றும் 19ஆவது மத்திய கமிட்டி உறுப்பினர், 17ஆவது மத்திய கமிட்டி மற்றும் 18ஆவது மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினர், 19ஆவது மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர் மற்றும் நிரந்தர உறுப்பினர்