வாங் ஹூனிங்

வாங் ஹூனிங்

வாங் ஹூனிங், ஆண், ஹான் இனத்தவர். 1955ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் பிறந்தார். ஷென்தோங் மாநிலத்தின் லய் சோ மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1977ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் முதன்முதலாகப் பணியில் சேர்ந்த இவர், 1984ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பூதான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல்  பாடத்தில் பட்டம் பெற்றார். அதோடு, சட்டத் துறையிலும் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தவிரவும், அவர் பேராசிரியராவார்.

தற்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி செயலகத்தின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கொள்கை ஆய்வுப் பணியகத்தின் தலைவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சீர்திருத்தத்தை பன்முகங்களிலும் ஆழமாக்குவதற்கான தலைமைக் குழு பணியகத்தின் தலைவர் ஆகிய பதவிகளை ஏற்றுள்ளார்.

1972-1977, ஷாங்ஹாய் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் அலுவலர் பள்ளியில் வெளிநாட்டு மொழிப் பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டார்.

1977-1978, ஷாங்ஹாய் மாநகரப் பதிப்புப் பிரசுர பணியகத்தின் ஊழியராகப் பணிபுரிந்தார்

1978-1981, பூதான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் துறையில் சேர்ந்து சர்வதேச அரசியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார்

1981-1989, பூதான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் பாடப் பிரிவில், ஆசிரியர், துணைப் பேராசிரியர், பேராசிரியர்

1989-1994, பூதான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் பாடப் பிரிவின் புல முதன்மையர்

1994-1995, பூதான் பல்கலைக்கழகத்தின் சட்டயியல் பள்ளியின் புல முதன்மையர்

1995-1998, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கொள்கை ஆய்வுப் பணியகத்தின் அரசியல் பிரிவின் தலைவர்

1998-2002,சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கொள்கை ஆய்வுப் பணியகத்தின் துணைத் தலைவர்

2002-2007, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கொள்கை ஆய்வுப் பணியகத்தின் தலைவர்

2007-2012,சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி செயலகத்தின் தலைவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கொள்கை ஆய்வுப் பணியகத்தின் தலைவர்

2012-2014, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கொள்கை ஆய்வுப் பணியகத்தின் தலைவர்

2014-2017, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கொள்கை ஆய்வுப் பணியகத்தின் தலைவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பன்முக ஆழமான சீர்திருத்த தலைமைக் குழு பணியகத்தின் தலைவர்

2017ஆம் ஆண்டு முதல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி செயலகத்தின் தலைவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கொள்கை ஆய்வுப் பணியகத்தின் தலைவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பன்முக ஆழமான சீர்திருத்த தலைமை குழுவின் பணியகத்தின் தலைவர்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16, 17, 18, 19 ஆகிய தேசிய மாநாடுகளின் மத்திய கமிட்டி உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு மத்திய கமிட்டி செயலகத்தின் தலைவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டின் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினர், நிரந்தர உறுப்பினர் மற்றும் மத்திய கமிட்டி செயலகத்திந தலைவர்.