ட்சாவ் லெஜி

ட்சாவ் லெஜி

ட்சாவ் லெஜி, ஹான் இனத்தவர். 1957ஆம் ஆண்டு மார்ச் திங்களில் பிறந்தார். சாங்சி மாநிலத்தின் சீ ஆன் நகரைச் சேர்ந்தவர். 1974ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் பணி புரிய தொடங்கினார். 1975ஆம் ஆண்டு ஜுலை திங்களில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவராவார்.

தற்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையத்தின் செயலாளர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அமைப்புத் துறை அமைச்சர் ஆகிய பதவிகளை ஏற்றுள்ளார்.

1974-1975, சிங் ஹாய் மாநிலத்தின் குய் தெ மாவட்டத்தின் ஹெ டொங் வட்டத்தின் கொங் பா அணியில் பணி புரிந்த கல்வி கற்ற இளைஞர் அறிவு இளைஞர்

1975-1977, சிங் ஹாய் மாநிலத்தின் வணிகப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர்

1977-1980, பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையில் தத்துவப் பட்டத்துக்கான மாணவர்

1980-1982, சிங் ஹாய் மாநில வணிக துறையின் அரசியல் அலுவலகத்தின் பணியாளர், சிங் ஹாய் மாநிலத்தின் வணிகப் பள்ளியின் ஆசிரியர், சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக்கைச் சேர்ந்த இப்பள்ளி கமிட்டியின் செயலாளர்

1982-1983, சிங் ஹாய் மாநில வணிகப் பள்ளியின் கல்வி விவகார அலுவலகத்தின் துணைத் தலைவர்

1983-1984, சிங் ஹாய் மாநில வணிகத் துறையின் அரசியல் அலுவலகத்தின் துணைத் தலைவர், சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக்கைச் சேர்ந்த வணிக துறை கமிட்டியின் செயலாளர்

1984-1986, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிங் ஹாய் மாநிலத்தின் வன்பொருள், மின்சாரப் பொருள் மற்றும் வேதியியல் பொருள் தொழில் நிறுவனத்தின் கட்சிக் குழு செயலாளர் மற்றும் இந்நிறுவனத்தின் மேலாளர்

1986-1991, சிங் ஹாய் மாநிலத்தின் வணிகத் துறையின் துணைத் தலைவர் மற்றும் இத்துறையின் கட்சி கமிட்டியின் துணை செயலாளர்

1991-1993, சிங் ஹாய் மாநிலத்தின் வணிகத் துறை தலைவர் மற்றும் இத்துறையின் கட்சிக் குழுச் செயலாளர்(1992ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் மாநில வினியோக மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கத்தின் தலைவர்)

1993-1994, சிங் ஹாய் மாநிலத் தலைவரின் துணையாளர், சிங் ஹாய் மாநிலத்தின் நிதித் துறையின் தலைவர், இப்பணியகத்தின் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டியின் செயலாளர்

1994-1995, சிங் ஹாய் மாநிலத்தின் துணைத் தலைவர், சிங் ஹாய் மாநிலத்தின் நிதித் துறையின் தலைவர், இத்துறையின் கட்சிக் குழு செயலாளர்

1995-1997, சிங் ஹாய் மாநிலத்தின் துணைத் தலைவர்

1997-1997, சிங் ஹாய் மாநிலத்தின் துணைத் தலைவர், சி நிங் நகரின் கட்சிக் குழு செயலாளர்

1997-1999, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிங் ஹாய் மாநிலக் கட்சிக் குழுவின் துணைச் செயலாளர், சி நிங் நகரின் கட்சிக் குழு செயலாளர்

(1996-1998, சீனச் சமூக அறிவியல் கழகத்தின் முதுகலை பட்டப் படிப்புக்கழகத்தின் நாணய மற்றும் வங்கித் துறையின் முதுகலை பட்ட வகுப்பு மாணவர்

1998ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 1999ஆம் ஆண்டு ஜனவரி வரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி கல்லூரியின் மாநில மற்றும் அமைச்சர் நிலை ஊழியர் மேற்படிப்பு வகுப்பின் மாணவர்)

1999-2000, சிங் ஹாய் மாநில கட்சிக் குழுவின் துணைச் செயலாளர், சிங் ஹாய் மாநிலத்தின் தற்காலிகத் தலைவர்

2000-2003, சிங் ஹாய் மாநில கட்சி குழுவின் துணைச் செயலாளர், சிங் ஹாய் மாநிலத்தின் தலைவர்

2003-2003, சிங் ஹாய் மாநில கட்சி குழுவின் செயலாளர், சிங் ஹாய் மாநிலத்தின் தலைவர்.

2003-2004, சிங் ஹாய் மாநில கட்சிக் குழுவின் செயலாளர்.

2004-2007, சிங் ஹாய் மாநில கட்சிக் குழுவின் செயலாளர், சிங் ஹாய் மாநிலத்தின் மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர்.

(2002-2005, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி கல்லூரியின் பகுதி நேர முதுகலை பட்ட வகுப்பின் அரசியல் அறிவியல் துறை மாணவர்)

2007-2008, ஷான் சீ மாநிலத்தின் கட்சிக் குழு செயலாளர்.

2008-2012, ஷான் சீ மாநிலத்தின் கட்சிக் குழு செயலாளர், ஷான் சீ மாநிலத்தின் மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவர்.

2012-2017, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி செயலகத்தின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அமைப்புத்துறை அமைச்சர்

2017 முதல்-, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையத்தின் செயலாளர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அமைப்புத் துறை அமைச்சர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16, 17, 18 மற்றும் 19ஆவது மத்திய கமிட்டியின் உறுப்பினர். சீன கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி செயலகத்தின் உறுப்பினர். சீன கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர், நிரந்தர உறுப்பினர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையத்தின் உறுப்பினர், நிரந்தர உறுப்பினர் மற்றும் செயலாளர்