ஹான் ட்செங்

ஹான் ட்செங், ஹான் இனத்தவர். 1954ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் பிறந்தார். ஜெச்சியாங் மாநிலத்தின் ச்சிஷி நகரைச் சேர்ந்தவர். 1975ஆம் ஆண்டின் டிசம்பர் திங்கள் பணி புரிய தொடங்கினார். 1979ஆம் ஆண்டின் மே திங்களில், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். குவா தோங் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, சர்வதேச உறவு மற்றும் உலகப் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றார். தவிரவும், பதவியில் இருந்தவாறே முதுகலைப் பாடத்தைப் பயின்றார். அதோடு பொருளியல் முனைவர் பட்டமும் பெற்றார். சீனாவின் உயர்நிலை பொருளாதார நிபுணராகத் திகழ்கின்றார்.

தற்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் ஆவார்.

1975-1980, ஷாங்காய் மாநகரின் சுஹூவெய் மாவட்டத்தின் பண்டச்சாலை ஒன்றின் நிர்வாகப் பணியாளர், வழங்கீடு மற்றும் விற்பனைக் கூட்டுறவு வணிக அலுவலகத்தின் பணியாளர், இளைஞர் லீக்கின் துணைச் செயலாளர்

1980-1982, ஷாங்காய் மாநகரின் எண்ணெய் மற்றும் வேதியியல் உற்பத்திப் பொருட்கள் சாதனத் தொழில் துறை நிறுவனத்தின் தலைமை இயக்குநர், இளைஞர் லீக்கின் பொறுப்பாளர்

1982-1986, ஷாங்காய் மாநகரின் எண்ணெய் மற்றும் வேதியியல் உற்பத்தி ஆணையத்தின் இளைஞர் லீக்கின் செயலாளர்(1983-1985, ஃபூதான் பல்கலைக்கழகத்தின் வகுப்பில் சேர்ந்தார்)

1986-1987, ஷாங்காய் மாநகரில் எண்ணெய் மற்றும் வேதியியல் கல்லூரிக் கட்சி குழுத் துணைச் செயலாளர்

1987-1988, கட்சியின் ரப்பர் காலணி தொழிற்சாலை குழுவின் செயலாளர், துணைத் தலைவர் (1985-1987, குவா தோங் ஆசிரியிர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் அரசியல் கல்வித் துறையில் சேர்ந்தார்)

1988-1990, கட்சியின் ஷாங்காய் மாநகரில் டா ட்சொங் குவா ரப்பர் தொழிற்சாலைக் குழுச் செயலாளர், துணைத் தலைவர்

1990-1991, ஷாங்காய் மாநகரின் இளைஞர் லீக்கின் துணைச் செயலாளர்(பணிக்குத் தலைமை தாங்கினார்)

1991-1992, ஷாங்காய் மாநகரின் இளைஞர் லீக்கின் செயலாளர்

1992-1993, கட்சியின் ஷாங்காய் மாநகரின் லூவான் மாவட்டக் குழுத் துணைச் செயலாளர், தற்காலிக மாவட்டத்தின் தலைவர்

1993-1995, கட்சியின் ஷாங்காய் மாநகரின் லூவான் மாவட்டக் குழுத் துணைச் செயலாளர், மாவட்டத் தலைவர்

(1991-1994,குவா தொங் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பிரச்சினை ஆய்வகத்தின் சர்வதே உறவு மற்றும் உலக பொருளாதாரத் துறையில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார்)

1995-1997, ஷாங்காய் மாநகராட்சி அரசின் துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சியின் கட்சியின் பன்நோக்குப் பொருளாதாரப் பணிக் குழுவின் துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சியின் திட்ட ஆணையத்தின் தலைவர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த ஆணையத்தின் செயலாளர், ஷாங்காய் மாநகரின் பங்குச் சந்தை மேலாண்மை அலுவலகத்தின் தலைவர்

1997-1998, கட்சியின் ஷாங்காய் மாநகராட்சிக் குழு நிரந்தர உறுப்பினர், மாநகராட்சி அரசின் துணச் செயலாளர்

1998-2002,கட்சியின் ஷாங்காய் மாநகராட்சிக் குழு நிரந்தர உறுப்பினர், ஷாங்காய் மாநகரின் துணைத் தலைவர்

2002-2003, கட்சியின் ஷாங்காய் மாநகராட்சி கட்சியின் துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகரின் துணைத் தலைவர்

2003-2004, கட்சியின் ஷாங்காய் மாநகராட்சி குழு துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சித் தலைவர்

2004-2006,கட்சியின் ஷாங்காய் மாநகராட்சி குழுத் துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சித் தலைவர், 2010ஆம் ஆண்டின் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான ஏற்பாட்டுக் குழுவின் துணை உறுப்பினர், செயல் குழுவின் செயல் தலைவர்

2006-2007, கட்சியின் ஷாங்காய் மாநகரின் குழுவின் தற்காலிகச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சித் தலைவர், 2010ஆம் ஆண்டின் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான ஏற்பாட்டுக் குழுவின் துணை உறுப்பினர், முதலாவது துணை உறுப்பினர், செயற்குழுவின் செயல் தலைவர், செயல் குழுவின் தலைவர்

2007-2008, கட்சியின் ஷாங்காய் மாநகரின் குழுத் துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சித் தலைவர்,  2010ஆம் ஆண்டின் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது துணை உறுப்பினர், செயற்குழுவின் தலைவர்

2008-2011, கட்சியின் ஷாங்காய் மாநகரின் குழு துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சித் தலைவர், 2010ஆம் ஆண்டின் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான ஏற்பாட்டுக் கமிட்டியின் துணை உறுப்பினர், செயற்குழுவின் தலைவர்

2011-2012, கட்சியின் ஷாங்காய் மாநகரின் குழுத் துணைச் செயலாளர், ஷாங்காய் மாநகராட்சித் தலைவர்

2012-2017, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினர், கட்சியின் ஷாங்காய் மாநகர குழு செயலாளர்

2017- சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு நிரந்தர உறுப்பினர், கட்சியின் ஷாங்காய் மாநகர குழு செயலாளர்

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 16, 17, 18 மற்றும் 19ஆவது மத்திய கமிட்டியின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது மத்திய கமிட்டி அரசியல் குழு நிரந்தர உறுப்பினர்