பன்ஜின் நாட்டுப்புற அருங்காட்சியகம்(1/5)

Published: 2018-02-07 15:00:52
Download image Comment
Share
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
லியாவ்நிங் மாநிலம், பன்ஜின் மாவட்டத்தில் லாவ்ஹு என்ற நாட்டுப்புற அருங்காட்சியகம் அமைந்துள்ளது. பழங்காலத்தில் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் காட்சியகத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வகையிலான பழங்கால விளக்குகள் முதல் புகைப்பிடிப்பான் வரையிலான தொன் பொருள்கள் அருங்காட்சியகத்தை அலங்கரிக்கின்றன. உடைந்த அல்லது தூர் விட்டுப்போன பீங்கான் பாண்டங்களை எப்படி இணைத்து மீண்டும் பயன்படுத்துவது என்ற பண்டைய தொழில்நுட்பத்தை அருங்காட்சியகத்தில் கண்டு வியக்கலாம். அத்துடன், அருங்காட்சியகத்துடன் ஒட்டி அமைந்துள்ள உணவு விடுதியில் பரிமாறப்படும் உள்ளூர் பாரம்பரிய உணவுகள், உள்ளூர் மக்களின் பண்பாடுகளை ஆழஞ்சென்று உணர்வதற்கு வாய்ப்பாக அமைகின்றன. அருங்காட்சியகம் அறிவுக்கு விருத்தம் உணவு விடுதி உடலுக்கு விருத்தி எனும் விதம் இது அமைந்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க