ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை மீதான ஆக்கப்பூர்வமான மதிப்பீடு

2018-06-25 09:26:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூன் 22,23 ஆகிய இரு நாட்கள், பெய்ஜிங் மாநகரில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டு விவகாரப் பணிக் கூட்டத்தில் முக்கிய உரைநிகழ்த்தினார்.

சீனாவின் வெளிநாட்டுக் கொள்கையை ஷிச்சின்பிங்கின் உரை தெளிவுபடுத்தியுள்ளது. நடைமுறை நடவடிக்கையின் மூலம், பிரதேச மற்றும் உலகின் அமைதியைப் பேணிக்காத்து, உலகின் செழுமை மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்தி, மனிதக் குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தைக் கட்டியமைக்கும் இலக்கைச் சீனா நனவாக்கும் என்று வெளிநாட்டு நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நிதித் துறையினரில் ஒருவரான அஹமேத் வால்ஸ்கிட் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கியில் பணி புரிந்துள்ளார். தற்போது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுடன் தொடர்புடைய முதலீட்டுத் திட்டப்பணிகளில் அவர் கவனம் செலுத்தி வருகின்றார். ஷிச்சின்பிங்கின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவு, சீர்திருத்தம் வாய்ந்த வளர்ச்சி முன்மொழிவுகளில் ஒன்றாகும். இந்த முன்மொழிவு இடைவிடாமல் தொடர்வதால், பொருளாதாரம், அரசியல், சமூகம் முதலிய துறைகளில், தொடர்புடைய நாடுகளில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்