சூட்சோ தொழில் பூங்காவின் சாதனைக்கான இரகசியம் என்னென்ன?

மதியழகன் 2018-07-05 10:57:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சூட்சோ தொழில் பூங்காவின் சாதனைக்கான இரகசியம் என்னென்ன?

சீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை செயலுக்கு வந்த பின்னணியில், 1994ஆம் ஆண்டு சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் அரசுகள் கூட்டாக முதலீடு செய்து, சூட்சோ தொழில் பூங்கா அமைக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வளர்ந்து வரும் இந்தத் தொழில் பூங்கா, பொருளாதார மற்றும் சமூகத் துறையில் பல பல குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக, 2017ஆம் ஆண்டு,  நாடு முழுவதிலுள்ள பொருளாதார வளர்ச்சி மண்டலங்களின் பன்னோக்கு மதிப்பீட்டுத் தரவரிசையில், சூட்சோ தொழில் பூங்கா முதலிடம் வகிக்கிறது.சீனாவின் 100 பெரிய தொழில் பூங்காக்களின் வரிசையில்  3ஆவது இடத்தையும், உயர் புதிய தொழில்நுட்ப பூங்காக்களின் வரிசையில் 5ஆவது இடத்தையும் பெற்று இப்பூங்கா சாதனைகளைப் படைத்துள்ளது. 

இந்த சிறந்த சாதனைகள் பெற்றதன் ரகசியம் என்னென்ன? என்பது குறித்து கேள்விக்குப் பதில் அளித்து, சூட்சோ தொழில் பூங்கா நிர்வாகக் குழு தொலைநோக்கு திட்டமிடல், முன்னோடிச் சோதனை மற்றும் சீர்திருத்தம், திறப்பு மற்றும் புதுமையாக்கம், தொழில் புரிவதற்குரிய எளிதான சூழல், புதுமையான சமூக நிர்வாகம் ஆகியவை முக்கிய காரணங்கள் என்று தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

இவற்றில், சூட்சோ தொழில் பூங்காவில் காணப்படும் தொழில் புரிவதற்கான எளிதான சூழலுக்கு, பல தொழில் நிறுவனங்களும் பாராட்டு தெரிவித்துள்ளன.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய சு டிங், சூட்சோ தொழில் பூங்காவில் காங்நிங்ஜிருய் உயிரியில் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியுள்ளார்.  இந்த தொழில் பூங்காவில் தொழில் நடத்த தொடங்க முடிவு செய்ததன் காரணம் பற்றி அவர் பேசுகையில்

இங்கு தொழில் புரிவது மிகவும் எளிமையாது. தொழில் புரிவதற்கான சாதகமான சூழல்களை உருவாக்கும் கண்ணோட்டம் இங்கே காணப்படுகிறது. எனது தொழில் நிறுவனத்தின் தொடக்கம் மற்றும் வளர்ச்சிப் போக்கில் பல்வகை ஆதரவு கிடைத்துள்ளது. தொழில் பூங்கா தரப்பின் உதவியுடன், நிறுவனம் சந்தித்த பெரிய அல்லது சிறிய சிக்கல்கள்  தீர்க்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

தொழில் புரிவதற்கான சாதகமான சூழல்களை உருவாக்குவதற்காக சேவை புரிவது, சூட்சோ தொழில் பூங்காவில் முக்கிய  அனுபவமாகும். அது, சூட்சோ தொழில் பூங்காவின் முக்கிய போட்டித் திறன்களில் ஒன்றாகும். 

சூட்சோ தொழில் பூங்கா அங்கீகார ஒழுங்குமுறையை எளிமைப்படுத்த முயற்சி எடுத்துள்ளது. அரசு செயல்பாடுகளின் மாற்றத்தை விரைவுபடுத்தி, சந்தையின் உயிராற்றல் மற்றும் உந்து ஆற்றலுக்கு  பயனுள்ள முறையில் பங்காற்றி வருகிறது. இதனால், கடந்த 3 ஆண்டுகளில்,  ஆண்டுதோறும் சுமார் 15ஆயிரம் பல்வகை தொழில் நிறுவனங்கள் புதிதாக அதிகரித்துள்ளன.

மேலும், நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கான சேவை மையம் நாடளவில் முதலில் நிறுவப்பட்டது. நிதி திரட்டல், அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான சேவைகளும், தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்