பொது மக்கள் அருமையான வாழ்க்கைக்கான சூட்சோ தொழில் பூங்காவின் முயற்சிகள்

மதியழகன் 2018-07-05 20:18:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

1978ஆம் ஆண்டு, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை சீனாவில் நடைமுறைக்கு வரத் தொடங்கியது. இந்த கால ஓட்டத்திலேயே, சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாட்டு அரசுகளின் ஒத்துழைப்புடன் சூட்சோ தொழில் பூங்காவை கட்டியமைக்கும் திட்டம் 1994ஆம் ஆண்டு செயலுக்கு வந்தது.

பொது மக்கள் அருமையான வாழ்க்கைக்கான சூட்சோ தொழில் பூங்காவின் முயற்சிகள்

நெடுநோக்குப் பார்வையிலான திட்டவரைவு, தொழில் பூங்காவின் நீண்டகால வளர்ச்சிக்கு சிறந்த அடிப்படையை உருவாக்கியுள்ளது.  முன்னோடிச் சோதனை,  தொடரச்சிச் சீர்திருத்தம், புதுமையாக்கம் ஆகியவை,  தொழில் பூங்காவின்  வளர்ச்சிக்கு வலுவான உந்து சக்தியை ஊட்டி வருகின்றன. தொழில் புரிவதற்கான எளிய மற்றும் சாதகமான சூழல்களால்  பற்பல தொழில் நிறுவனங்கள் சூட்சோ தொழில் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளன. புதுமையான சமூக நிர்வாகத்தின் மூலம், மக்கள் முதன்மைக் கருத்தை நடைமுறைப்படுத்துவதால், இங்கு பல திறமைசாலிகள் ஒன்று கூடுகின்றனர். இந்த முயற்சிகளால், சூட்சோ தொழில் பூங்காவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் மாபெரும் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இவை, சூட்சோ தொழில் பூங்கா வெற்றி பெற்றதன் முக்கிய காரணங்களாகும்.

குறிப்பாக, வளர்ச்சிச் சோதனைகளை மக்கள் பகிர்ந்து கொள்வதன் வழி, மக்கள் அருமையான வாழ்க்கையை அடையும் குறிக்கோள்களை  எப்படி நிறைவேற்றுவது  என்பதற்கான விடை, சூட்சோ தொழில் பூங்காவில் கிடைக்கலாம்.

பொது மக்கள் அருமையான வாழ்க்கைக்கான சூட்சோ தொழில் பூங்காவின் முயற்சிகள்

சூட்சோ தொழில் பூங்கா என்ற பெயரில் இருந்து பார்த்தால், தொழிற்சாலைகள் ஒன்றிணைக்கும் பகுதி மட்டும்  என்று தவறாக நினைக்க வாய்ப்புள்ளது.

சூட்சோ தொழில் பூங்காவில் சுற்றுப் பயணம் செய்த பிறகு, முற்றிலும் வேறுபட்ட காட்சி உங்கள் மனதில் உருவாகும். அது, தொழில் பூங்கா மட்டுமல்லாமல்,  புதுமையான நவீனமான நகரம் இருப்பது உண்மையே. இந்த தொழில் பூங்காவில்,  நல்ல அடிப்படை வசதிகளுடன், தொழில் நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள், குடியிருப்புகள்  ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும்,  பெரிய வணிக வளாகங்கள், குடியிருப்புக்களுக்கான பொதுச் சேவை மையங்கள், மருத்துவ மனைகள், பள்ளிகள், விளையாட்டு மையம், பண்பாட்டு மையம் ஆகிய நவீன வசதிகளும் கட்டியமைக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள்  தொழில் பூங்காவில் பணி புரிந்து வருவதுடன்,  இங்கே  வசதியாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

தொழில் பூங்காவிலுள்ள அதிகமான நிறுவனங்கள்  மக்களுக்கு மாபெரும் வேலை வாய்ப்புகளை உருவாக்குபவைகளாகத் திகழ்கின்றன. தொடரவல்ல வளர்ச்சி,  உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய கொள்கையைக் கண்டிப்பாக கடைப்பிடித்து வருவதால், வாழ்க்கைக்கு உகந்த நல்ல சுற்றுச்சூழலும் காணப்படுகிறது.

பொது மக்கள் அருமையான வாழ்க்கைக்கான சூட்சோ தொழில் பூங்காவின் முயற்சிகள்

இது பற்றி, சூட்சோ சேர்ந்திசைக் குழுவின் துணைத் தலைவர் ட்சூ ஹுய்சின் பேசுகையில்

பூங்காவின் வடிவமைப்பு மிகவும் நவீனமானது.  வாழ்க்கையும் மிகவும் வசதியாகவும், வாழ்க்கைத் தரம் உயர்வாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

வாழ்க்கைக்கு உகந்த சூழலைத் தவிர, சூட்சோ தொழில் பூங்காவிலுள்ள விளையாட்டு மற்றும் பண்பாட்டு மையம் போன்ற வசதிகளையும், பொது மக்கள் பயன்படுத்தலாம். ஒரு தொழில் பூங்காவில் இத்தகைய வசதிகளை கட்டியமைத்து, பல்வகை நிகழ்ச்சிகளை நடத்தி, விலையாட்டு மற்றும் பண்பாட்டுத் தொழில்களை பெரிதும் வளர்ப்பதற்கான காரணம் என்ன?

இந்த கேள்விக்கு, சூட்சோ தொழில் பூங்கா நிர்வாகக் குழுவின் பொதுத் தொடர்பு துறைத் தலைவர் ச்சென்லோங் பதிலளிக்கையில்

இப்பூங்கா, 24 ஆண்டுகளுக்கு முன்பு, தொழில் பூங்காவாக உருவாக்கப்பட்டு, தற்போது புது நகரமாக மாறியுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தத் தொழில் பூங்காவில் நகரவாசிகள் அருமையான வாழ்க்கையைப் பெற்று, மகிழ்ச்சியுடன் பணிபுரிந்து, தொழில் நடத்துவதற்கு பண்பாட்டு ரீதியான ஆதரவு கிடைக்க வேண்டும். மக்களின் உளவியல் மற்றும் பண்பாட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது. மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாகவும், நகர வளர்ச்சிக்கு ஏற்கும் வகையிலும் நாம் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன் மூலம், அருமையான வாழ்க்கை மீதான மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறோம் என்று தெரிவித்தார்.

பொது மக்கள் அருமையான வாழ்க்கைக்கான சூட்சோ தொழில் பூங்காவின் முயற்சிகள்

பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் அதிக சாதனைகளைப் படைத்துள்ள சூட்சோ தொழில் பூங்கா,  தற்போதும் மக்கள் அருமையான வாழக்கையை அடைவதற்கு இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில், சூட்சோ தொழில் பூங்கா, சீர்திருத்தம் மற்றும் புதுமையாக்கம் செய்வதில்  மீண்டும் முன்னோடியாக மாறுவதாக எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்