ட்செஜியாங் மாநிலத்தின் விரைவான வளர்ச்சியின் இரகசியம்

மதியழகன் 2018-07-17 15:37:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் கிழக்கிலுள்ள ட்செஜியாங் மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, 2017ஆம் ஆண்டு 5 இலட்சம் கோடி யுவானைத் தாண்டியது. ட்செஜியாங்கின் ஜி.டி.பி ஸ்விட்சர்லாந்திற்குச் சமமாகும். தற்போது சீனாவில் வளைந்து கொடுக்கும் அமைப்புமுறை, உயர்ந்த நிலை திறப்பு, விரைவான பொருளாதார வளர்ச்சி, அதிகமான தனிநபர் வருமானம், ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சி ஆகியவை நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக, ட்செஜியாங் மாநிலம் விளங்குகிறது.

இந்தச் சாதனைகளைப் படைத்த இரகசியத்தைக் கேட்ட போது, உள்ளூர் மக்களிடம் இருந்து, எட்டு-எட்டு தொலைநோக்குத் திட்டம் என்ற பதில் கிடைத்தது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ட்செஜியாங் மாநிலக் குழுச் செயலாளராக ஷிச்சின்பிங், 2003ஆம் ஆண்டு ஜுலை திங்கள் ட்செஜியாங் மாநிலத்தின் எட்டு வளர்ச்சி மேம்பாடுகளை தொகுத்து, அதன் அடிப்படையில் எதிர்கால வளர்ச்சியை நோக்கி, 8 வளர்ச்சி முன்மொழிவுகளையும் முன்வைத்தார். எனவே, எட்டு-எட்டு என்ற வளர்ச்சித் திட்டம்  தோற்றுவிக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில், ட்செஜியாங் பொருளாதாரப் வளர்ச்சிப் போக்கில், இரண்டு பெரிய முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. ஒருபுறம், அரசு சார் நிறுவனங்களின் சீர்திருத்தம் ஆழ்ந்த நிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறுபுறம், தனியார் நிறுவனங்கள் விரைவாக வளர்ந்து வருகின்றன.

ஷிச்சின்பிங் வழங்கிய 8 வளர்ச்சி முன்மொழிவுகளில், பல்வகை  உடைமைப் பொருளாதாரங்களின் கூட்டு வளர்ச்சியை முன்னெடுத்து, சந்தைப் பொருளாதார அமைப்புமுறையை முழுமைப்படுத்துவது முதன்மை இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி செயல்படுத்தி, ட்செஜியாங் மாநிலம் அரசு சாரா பொருளாதார மேம்பாடுகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தற்போது, 65 விழுக்காட்டு உற்பத்தி மதிப்பு, 77 விழுக்காட்டு ஏற்றுமதி,  56 விழுக்காட்டு வரி வருமானம், 80விழுக்காட்டு வேலை வாய்ப்பு போன்ற சாதனைகளை தனியார் நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.

இந்த சாதனைகளின் பின்புறத்தில், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி உயிராற்றல் மட்டுமல்லாமல், எளிதில் தொழில் புரிவதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க அரசு ஆக்கப்பூர்வமான பங்காற்றியுள்ளது.

2016ஆம் ஆண்டு, அரசு நிர்வாகத்தின் சீர்திருத்த நடவடிக்கை, ட்செஜியாங் மாநிலத்தில் செயலுக்கு வரத் தொடங்கியது. அந்த  சீர்திருத்த நடவடிக்கை, அரசுக்கும் சந்தைக்கும் இடையே எல்லையை  உறுதிச் செய்வதாகவும்,  அரசின் சேவை வழியை புதுமையாக்கம் செய்வதாகவும் அமைந்திருந்தன. அதன் மூலம், தொழில் புரிவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது, அரசு தொடர்பான நடவடிக்கைகளுக்கு “அதிகப்டசமாக ஒருமுறை வந்துச் செல்வது” என்ற நடைமுறை, நாடு முழுவதிலும் பரவல் செய்யப்பட்டு வருகிறது.“மிக குறைவான அங்கீகாரங்கள், மிக உயர்வான பணிப் பயன்,  மிக சிறந்த அரசு அலுவல் சூழ்நிலை, மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மிக அதிகமான நன்மைகள் ”ஆகியவை கொள்ளும் மாநிலம் ஒன்றை உருவாக்க ட்செஜியாங் மாநில அரசு பாடுபட்டு வருகிறது.

 

 

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்