சீனப் பொருளாதாரப் பணிக்கு ஏற்பாடு செய்த அரசியல் குழுக் கூட்டம்

வான்மதி 2018-08-01 20:13:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி அரசியல் குழுக் கூட்டம் ஜுலை 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

பொதுவாக ஜுலையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஆண்டின் முற்பாதியில் நாட்டின் பொருளாதார நிலைமை பற்றி மதிப்பீடு செய்யப்பட்டு, தொடர்புடைய பணிகளைத் தொகுக்கும் அடிப்படையில், புதிய முடிவு மற்றும் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். நடப்புக் கூட்டத்தில் புதிய கருத்து தெரிவிக்கப்பட்டதால், முன்பிருந்து இது பெரிதும் வித்தியாசமானது என்று நிபுணர்கள் கருதினர். தற்போது பொருளாதாரத்தின் சீரான செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய பிரச்சினை மற்றும் சவால்களை எதிர்கொண்டுள்ள சீனப் பொருளாதாரத்தின் வெளிப்புறச் சூழல் தெளிவாக மாறியுள்ளது என்று நடப்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகத்தின் சீனப் பொருளாதார கண்காணிப்பு மற்றும் ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் பான் ஜியன்சேங் கூறுகையில், தற்போதைய பொருளாதார நிலைமை பற்றிய மதிப்பீட்டில் நான் கவனம் செலுத்தினேன். சீரான செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கருத்து முன்வைக்கப்படுவது இதுவே முதன்முறை. குறிப்பாக வெளிப்புறச் சூழல் பெரிதும் மாறியுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்தகைய பின்னணியில்தான், அரசியல் குழுக் கூட்டத்தில் திட்டவட்டமான பணிகளுக்கு மேலும் சரியான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.

சீன-அமெரிக்க வர்த்தகச் சர்ச்சை, உறுதியற்ற வெளிநாட்டுத் தேவை ஆகியவை வெளிப்புறச் சூழலின் மாற்றத்தை அதிகரித்துள்ளன. கடன் குறைப்பு, நிதித் துறை சீர்திருத்தம், நிலச் சொத்துக் கட்டுப்பாடு உள்ளிட்டவையும், சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு ஓரளவு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், வேலை வாய்ப்பு, நிதி, வெளி வர்த்தகம், அந்நிய முதலீடு, எதிர்பார்ப்பு ஆகிய 6 துறைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று நடப்புக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது என்று அவர் கூறினார்.

இவ்வாண்டின் பிற்பாதி பொருளாதாரப் பணி குறித்து, பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியை நிலைநிறுத்தி, ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கையையும் சீரான நாணயக் கொள்கையையும் உறுதியுடன் செயல்படுத்தி, கொள்கைகளின் தொலைநோக்கு தன்மை, நெகிழும் தன்மை மற்றும் பயனுள்ள தன்மையை உயர்த்த வேண்டும். உள்நாட்டுத் தேவையின் விரிவாக்கம் மற்றும் கட்டமைப்பு மாற்றத்தில் நிதிக்கொள்கை மேலும் பெரும் பங்காற்ற வேண்டும். நாணய வினியோகத்தைச் செவ்வனே கட்டுப்படுத்தி, சீரான புழக்கத்தை நிலைநிறுத்த வேண்டும். சீனாவிலுள்ள அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் சட்டப்பூர்வ உரிமை நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்பு பணி நடைமுறைக்கு வந்த 40ஆவது ஆண்டு நிறைவை வரவேற்கும் முக்கிய தருணத்தில், வெளிப்புறச் சூழலின் மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, வெளி வர்த்தகம் மற்றும் அந்நிய முதலீட்டை உறுதிப்படுத்துவதற்கு இக்கூட்டத்தில் மேலும் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியை முன்னேற்றி, பயனுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து ஆய்வு செய்து மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்