புதுமையாக்கம் மற்றும் சீர்திருத்தத்தை முன்னெடுக்கும் சீனா

மதியழகன் 2018-08-24 19:13:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனப் பொருளாதார வளர்ச்சியில் புதிய உந்து சக்திகளின் பங்களிப்பு கடந்த ஆண்டுகளில் தெளிவாக அதிகரித்து வருகிறது.  சீன வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணைத்தின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறும் போது, எதிர்காலத்தில் புதுமையாக்கம் மற்றும் சீர்திருத்தம் தொடர்பான சோதனைப் பணிகளை விரிவான முறையில் முன்னெடுக்கப் போவதாக தெரிவித்தனர்.

புதுமையாக்கம் செய்தல் மற்றும் தொழில் புரிதலுக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும், புதிய தொழில்களைப் பலப்படுத்தும் வகையிலும், சீனா தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, புதிய சக்திகளால் கொண்டு வரப்படும் பொருளாதார வளர்ச்சியில், விரைவான வளர்ச்சி, அதிக உயிராற்றல், புதிய தொழில்கள், சிறந்த சூழில் போன்ற சிறப்புகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 2018ஆம் ஆண்டின் முதல் 7 திங்களில், உயர் நிலை தொழில் நுட்ப உற்பத்தித் தொழில், புதிய தொழில்கள் ஆகியவற்றின் மதிப்பு தலா, 11.6 மற்றும் 8.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனிடையில், சேவை புரியும் இயந்திர மனிதன், நுண்ணறிவுத் தொலைக்காட்சிப் பெட்டி, 3டி அச்சுத் தொழில் நுட்ப சாதனம், சூரியன் ஒளிச் சக்தி மின்கலம் உள்ளிட்ட புதிய தொழில்களின் உற்பத்தித் தொகை உயர் வேகத்தில் அதிகரித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் புதிய உந்து சக்திகளை உருவாக்கும் முறைமை முழுமையாகி வரும்போது, புதுமையாக்கலுக்கான நிதி ஒதுக்கீடு இடைவிடாமல் உயர்ந்து வருகிறது. 2017ஆம் ஆண்டு, இதற்காக, ஒரு லட்சத்தும் 75ஆயிரம் கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.12 விழுக்காட்டு பங்கு கொண்டது.

இவ்வாண்டு ஜுலை மாதம், ஐ.நா. உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு ஆகியவை கூட்டாக வெளியிட்ட 2018ஆம் ஆண்டுக்கான உலக புதுமையாக்க குறியீட்டு வரிசையில், 5 இடங்கள் முன்னேறி சீனா தற்போது 17ஆவது இடத்தில் உள்ளது. உலகின் முதல் 20 இடங்களுக்குள் சீனா இடம்பிடித்தது இதுவே முதல்முறையாகும். சீனாவில் புதுமையாக்கம் செய்வதற்கான சூழ்நிலை, புதுமையாக்கம் செய்து படைத்துள்ள சாதனைகள் ஆகிய துறைகளில் தெளிவான முன்னேற்றம் அடைந்துள்ளதை இது காட்டுகிறது.

சீர்திருத்தம் மற்றும் புதுமையாக்கம் செய்வதற்கான சோதனைப் பணிகளை சீனா எதிர்காலத்தில் பன்முகங்களிலும் முன்னேற்றி, இதற்கு உகந்த  அடிப்படை வசதிகளையும் அமைப்புமுறை ரீதியிலான சூழ்நிலையையும் மேம்படுத்தும் என்று சீன வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் அதிகாரி வூ ஹாவ் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்