உயர் தரமான வளர்ச்சியில் முன்னேறும் சென்சென்

மதியழகன் 2018-10-11 16:53:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைக்கு வந்த 40 ஆண்டுகளில், சீனாவின் பல நகரங்களில் வரலாற்று ரீதியிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீன சீர்திருத்தம் மற்றும் திறப்பின் சின்னமாகவும் ஜன்னலாகவும் கருதப்படும் சென்சென் மாநகரில், ஹுவாவெய், டென்சிண்ட், பீயாடி உள்ளிட் பல தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, வளர்ந்து பெரிதாகி வருகின்றன. இவ்வற்றுடன், சென்செனில் புத்தாக்க அதிசயம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இன்றைய சென்செனுக்கு, புத்தாக்கம் என்பது வளர்ச்சிக்கான முதல் உந்து சக்தியாக மாறியுள்ளது. 1979ஆம் ஆண்டு இருந்த போது, சென்சென் பொருளாதார மதிப்பு, 19.7 கோடி யுவான் மட்டும். கடந்த ஆண்டில் அதன் மதிப்பு, 2 இலட்சத்து 24ஆயிரம் கோடி யுவானாக உயர்ந்துள்ளது. தற்போது, இம்மாநகரில், ஆய்வுக்கான நிதி ஒதுக்கீடு, அதன் மொத்த உற்பத்தி மதிப்பில் 4 விழுக்காட்டுக்கும் மேலாக உயர்ந்துள்ளது. இந்த விகிதம், சர்வதேசத்தின் முன்னிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அடிப்படை ஆய்வு, தொழில் நுட்பங்களின் முனைப்பு, சாதனைகளின் தொழிலாக்கம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ரீதியிலான நிதி ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் புதுமையான சங்கிலித் தொடரை உருவாக்கும் வகையிலும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் துறையில் தலைமை இடம் பிடிக்கும் விதமாகவும், சென்சென் பெரிய முயற்சிகளுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாண்டு மார்ச், சென்சென் மாநகரில், 4 அடிப்படை ஆய்வு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

புத்தாக்கம் செய்வதற்கு, திறமை இன்றியமையாதது. உயர் அறிவியல் தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்த திறமைசாலிகளை ஈர்க்கும் வகையில்,  புதிய ஊக்குவிப்பு முறைமையை சென்சென் செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம், புத்தாக்கம் செய்யும் திறமைசாலிகள், சென்சென்னில் தொழில் புரியத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டில் நல்ல எதிர்காலம் பெற்றுள்ள சென்நிங், 2014ஆம் ஆண்டு சென்சென்னுக்கு திரும்பி, புதிய தொழில் நிறுவனம் ஒன்றை நிறுவினார். சென்சென்னிலுள்ள சந்தைமயமாக்கச் சூழல், வெளிப்படையான முறைமை ஆகிய காரணிகளே தன்னை கவர்ந்திருந்தது என்று அவர் தெரிவித்தார்.

இணையதம் வழியில் விண்ணப்பம் தாக்கல் செய்து, பரிசீலனை மற்றும் தேர்வு செய்யப்பட்ட பிறகு, 4 கோடி ஊக்குவிப்பு நிதி எமது வங்கி கணக்கிற்கு கிடைத்துள்ளது. பிற வழியில் உதவி தேடுவதற்கான அவசியமில்லை என்று சென்நிங் குறிப்பிட்டார்.

புதிய யுகத்திற்கு நுழைந்த பிறகு, உயர்தரமான வளர்ச்சியை நனவாக்கும் வகையில், புதிய திட்டத்தை சென்சென் மீண்டும் வரைந்து வருகிறது. இதற்காக, உயிரினம், விண்வெளி, புதிய பொருள் உள்ளிட்ட முக்கிய அடிப்படை ஆய்வுக்கு ஆதரவம் அளிக்கும் அறிவியல் நகரை உருவாக்குவதாக ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவியல் நகர், முன்னிலை ஆய்வு நிறுவனங்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் ஒரு பொதுவான அடிப்படை வசதியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்