தனியார் நிறுனங்களின் வளர்ச்சிக்கு நல்ல சூழலை உருவாக்க சீனா நடவடிக்கை

மதியழகன் 2018-11-11 15:19:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில்,  தனியார் நிறுவனங்கள் அரசுசார் நிறுவனங்களின் சீர்திருத்தத்தில் கலப்பது, தொழில் புரிவதற்கான சாதகமான சூழல்களின் மதிப்பீட்டு முறைமையை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும். சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத் துணைத் தலைவரும் தேசிய புள்ளிவிபர பணியகத் தலைவருமான நிங் ஜிட்செ சனிக்கிழமை இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்

2018ஆம் ஆண்டுக்கான சீனச் சந்தை நுழைவின் எதிர்மறை பட்டியல் உரிய நேரத்தில் வெளியிடப்பட்டு, நாடளவில் முழுமையாக செயல்படுத்தப்படும். அதேசமயத்தில், தொழில் புரிவதற்கான சூழல்களின் மதிப்பீட்டு முறைமை சில பகுதிகளில் முன்னோடியாக இயங்கும். இதன் மூலம் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுனங்களுக்கு நிலையான நியாயமான மற்றும் எதிர்பார்க்கத்தக்க சாதகமான சூழல்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்