சீனாவின் ஏகபோக எதிர்ப்புச் சட்ட அமலாக்கம்

மதியழகன் 2018-11-16 19:24:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் ஏகபோக எதிர்ப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் தற்போது வரை 10ஆவது ஆண்டு நிறைவு பெற்றது. கடந்த 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வந்த இந்த சட்டத்தின் அமலாக்கம் குறித்து சீனத் தேசிய சந்தை மேற்பார்வை மற்றும் மேலாண்மை நிர்வாகத்தின் துணை தலைவரும், சீன அரசவையின் ஏகபோக எதிர்ப்பு ஆணையத்தின் செயலாளருமான கான் லீன் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசியபோது

கடந்த 10 ஆண்டுகளில், சீனா முனைப்புடன் செயல்பட்டு,  ஒருமைப்பாடு, திறப்பு மற்றும் ஒழுங்கான போட்டிச் சூழல் கொண்ட சந்தை அமைப்புமுறையை உருவாக்கியுள்ளது. இந்தப் போக்கில், நுகர்வோரின் நலன்களைப் பேணிக்காக்கும் விதமாக, சட்டப்படியான முறையில் ஏகபோக நடவடிக்கைகளை ஒடுக்கி வந்ததில் குறிப்பிட்ட பயன் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக, பொருளாதாரத்தின் உலகமயமாக்கம், தொழில் நிறுவனங்களுக்கு போட்டியின் சர்வதேசமயமாக்கம் ஆகியவை ஏற்பட்ட பின்னணியில்,  தொழில் புரிவதற்கு சட்டப்படியான, வசதியான மற்றும் சர்வதேசமயமான சூழல்களை சீனா முழுமைப்படுத்தி வந்துள்ளது. சர்வதேசப் போட்டி விதிமுறையுடன்  இணையும் முன்னேற்றப் போக்கினையும் சீனா முன்னெடுத்து வந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 28 நாடுகள் மற்றும பிராந்தியங்களுடன் ஏகபோக எதிர்ப்புச் சட்ட அமலாக்க வாரியங்களுடன் 55 ஒத்துழைப்பு ஆவணங்களில் சீனா கையெழுத்திட்டுள்ளது. ஏகபோக எதிர்ப்புச் சட்ட அமலாக்கத்தில் சீனாவின் பணிகள், சர்வதேச சமூகத்தின் அதிக பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

சீனாவின் ஏகபோக எதிர்ப்புச் சட்டம் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு பாகுபாடுகள்  வாய்ந்தது என்று வெளியுலகத்தில் எழுந்துள்ள ஐயம் குறித்து கான் லீன் செய்தியாளர் கூட்டத்தில் பதில் அளித்தார். அவர் தெரிவித்ததாவது:

இத்தகையக் கூற்றுக்கு ஆதாரம் ஏதுமில்லை. சீனாவின் ஏகபோக எதிர்ப்புச் சட்ட அலமாக்கத் துறை, ஒரே மாதிரியான முறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களைக் கையாள்வது வழக்கம். சட்டத்தை அமலாக்கும் செயல்முறை மற்றும் விளைவு வெளிப்படையாக உள்ளது.

சீனாவில் ஏகபோக வழக்குகளில், சீனாவின் அரசுசார் தொழில் நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. அது, மொத்த விசாரணை வழக்குகளில் 41 விழுக்காடு இடம்பெற்றது. அதனிடையில், வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள், 10.7விழுக்காடு மட்டும் கொண்டன என்றும் கான் லீன் குறிப்பிட்டார்.

உள் மற்றும் வெளிப்புறங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இணங்க, சீனாவின் ஏகபோக எதிர்ப்புச் சட்டம் கால ஓட்டத்துடன் திருத்தப்பட வேண்டும். அது தொடர்பான திருத்தங்களை கூடிய விரைவில்  நிறைவேற்றி புதிய வழிமுறையின் மூலம் நடைமுறையில் ஏற்படும் பெரிய சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்றும் கான் லீன் விருப்பம் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்