2018ஆம் ஆண்டு சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் துறை வளர்ச்சி

மதியழகன் 2019-01-14 17:12:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டு சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் துறையின் ஒட்டுமொத்த நிலை சீராக உள்ளது. மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை, 30 இலட்சம் கோடி யுவானைத் தாண்டியதோடு, புதிய வரலாற்றுப் பதிவையும் உருவாக்கியுள்ளது. சீன சுங்கத் துறைத் தலைமை நிர்வாகம் 14ஆம் நாளான திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிபரங்கள் இதைக் காட்டுகின்றன.

2018ஆம் ஆண்டு, முக்கிய வர்த்தக நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விரிவாக அதிகரித்துள்ளன. தரை மற்றும் கடல்வழிப் பட்டுப் பாதைகளின் நெடுகிலுள்ள நாடுகளுடனான வர்த்தக ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்ந்து வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவற்றில், ரஷியா, சௌதி அரேபியா, கிரேக்கம் ஆகிய நாடுகளுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 20 விழுக்காடு அதிகரித்தது என்று சீன சுங்கத் துறைத் தலைமை நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் லீ குய்வென் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு வெளிநாட்டு வர்த்தகம் வளர்ந்ததன் மிக முக்கிய காரணம், சீனாவில் தொழில் புரிவதற்கான சூழல் மேம்படுவதாகும் என்று லீ குய்வென் கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்

வரி உள்ளிட்ட கட்டணங்களின் குறைப்பு, துறைமுகங்களில் தொழில் புரிவதற்கான சூழலின் மேம்பாடு ஆகிய கொள்கை மற்றும் நடவடிக்கையால், வர்த்தகம் எளிமையாகும் நிலை மேலும் சீராகி வந்துள்ளது. தவிர, மருந்துகள், வாகனங்கள் மற்றும் வாகனப் பாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி வரி குறைவு, இறக்குமதித் துறையின் வளர்ச்சியை முன்னேற்றியது என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், 4ஆவது காலாண்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் துறையின் வளர்ச்சி வேகம் மந்தமாக விட்டது, வெளியுலகத்தின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இது பற்றி லீ குய்வென் கூறுகையில்

இந்த வளர்ச்சி வேகத்தின் மாற்றம் இயல்பாக உள்ளது. இந்த மாற்றம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொருளாதார நிலைமை, பன்னாட்டு பேரளவுச் சரக்குப் பொருட்களின் விலை, வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களின் திட்டங்கள் உள்ளிட்ட பல காரணிகளால் ஏற்பட்ட விளைவாகும் என்றார்.

கடந்த மாத்த்தில் நடைபெற்ற மத்தியப் பொருளாதாரப் பணிக் கூட்டத்தில், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் அன்னிய முதலீட்டுத் துறைகளின் வளர்ச்சியை நிலைநிறுத்துவதை 2019ஆம் ஆண்டு முக்கிய பணிகளில் ஒன்றாக செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வாண்டு, சீனா இறக்குமதியை அதிகரிப்பதில் மேலும் பெரும் முன்னேற்றம் அடையும். வர்த்தகத்தை எளிதாக்கும் விதமாக, மேலதிக நடவடிக்கைகளை சீன சுங்கத் துறைத் தலைமை நிர்வாகம் மேற்கொள்ளும் என்று லீ குய்வென் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் சீராக வளர்ந்து வரும் அதேசமயத்தில், அதன் தரம் மற்றும் பயன் மேலும் உயரும் என்று அவர் முன்மதிப்பீடு செய்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்