உயர் தரமான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் சீனா

மதியழகன் 2019-01-15 18:58:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டுப் பொருளாதாரப் பணிகளின் ஏற்பாடுகளை சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், நிதி அமைச்சகம், சீன மத்திய வங்கி ஆகியற்றின் அதிகாரிகள் 15ஆம் நாளான செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பில் விளக்கிக் கூறி உள்ளனர்.

புதிய ரக அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை பலப்படுத்துவது, வரி மற்றும் கட்டணங்களைக் குறைப்பது, நிலைப்புத் தன்மையுடைய நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றை சீனா எதிர்காலத்தில் செயல்படுத்தும்.

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத் துணைத் தலைவர் லியன் வெய்லியாங் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,

கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பு ஆகிய மையப் பணிகளைக் குவித்து, முதலீட்டை அதிகரிக்கும். மறுசீரமைப்புப் பணியில், உற்பத்தித் துறையின் தொழில் நுட்பங்களின் மேம்பாடு மற்றும் சாதனங்களின் புதுப்பித்தலுக்காகப் பாடுபடும் என்று தெரிவித்தார். கட்டுமானம் பற்றி அவர் மேலும் கூறியதாவது

ஒன்று, செயற்கை நுண்ணறிவு, தொழில்களின் இணையம், பொருட்களின் இணையம், 5ஜி தொலைத்தொடர்பு போன்ற புதிய ரக அடிப்படை வசதிகளின் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதாகும். இரண்டு, சரக்குப் போக்குவரத்து வசதி, வறுமை ஒழிப்பு மற்றும் கிராம்புறங்களில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட நகர மற்றும் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை முன்னேற்றுவதாகும். மூன்று, ஆற்றல், போக்குவரத்து, நீர்வளம் உள்ளிட்ட பெரிய ரக உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதாகும். நான்கு, கல்வி, மருத்துவம், ஆரோக்கியம் உள்ளிட்ட மக்களின் வாழ்க்கை மற்றும் பொதுச் சேவை தொடர்பான திட்டப்பணிகளின் கட்டுமானத்தை வலுப்படுத்துவதாகும். ஐந்து, உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பையும், இயற்கைப் பேரிடர் தடுக்கும் திறன் மேம்பாட்டையும் பலப்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டார்.

வரிக் குறைப்பு பற்றி சீன நிதி அமைச்சரின் உதவியாளர் சியு ஹோங்சாய் கூட்டத்தில் பேசுகையில்

2019ஆம் ஆண்டு ஆக்கப்பூர்வ நிதிக் கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துவதோடு, வரி மற்றும் கட்டணங்களை பெரிய அளவில் குறைத்து, நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும். இதனிடையில், உற்பத்தி தொழில்கள் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் சுமையைக் குறைத்து, உண்மைப் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பது முக்கிய அம்சமாகும் என்று தெரிவித்தார்.

நாணயக் கொள்கை பற்றி, சீன மத்திய வங்கியின் துணை ஆளுநர் ட்சு ஹெ சின் தெரிவித்தார்.

ஒருபுறம், நிலைப்புத் தன்மையுடைய நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது 2019ஆம் ஆண்டின் அடிப்படைத் திசையாகும். பெரும் அளவில் ஊக்குவிப்புக் கொள்கையை செயல்படுத்தாது. மறுபுறம், துல்லியமான பண விநியோகத்தின் மூலம், தனியார் நிறுவனங்கள், சிறிய தொழில் நிறுவனங்கள், வறுமை ஒழிப்பு, கிராமங்களின் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கான ஆதரவை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்