உற்பத்தித் துறையின் வளர்ச்சியைத் தூண்டும் சீனாவின் நடவடிக்கைகள்

மதியழகன் 2019-01-16 17:30:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், சீன மனித வளம் மற்றும் சமூக காப்புறுதி அமைச்சகம், சீன வணிக அமைச்சகம் ஆகியவை 16ஆம் நாள் புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் உற்பத்தித் துறையின் வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை அறிமுகம் செய்துள்ளன.

இதில், சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைத் துணை அமைச்சர் சின்கோபின் பேசுகையில், 2016ஆம் ஆண்டு முதல், உருக்குத் துறையின் உற்பத்தித் திறனைக் குறைப்பதை முக்கிய பணியாகக் கொண்டு செயல்பட்டு குறிப்பிட்ட பயன் பெற்றுள்ளது என்று தெரிவித்தார். இனி, முக்கிய மாநிலங்களில் உருக்கு துறையின் உற்பத்தித் திறனைக் குறைக்கும் பணியை சீனாத் தொடர்ந்து ஆதரிக்கும். சிமெண்ட் மற்றும் கண்ணாடி ஆகிய தொழில்களும், உற்பத்தித் திறனைக் குறைக்கும் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உற்பத்தித் தொழில்களின் போட்டித் திறனை மேம்படுத்தும் வகையில், உற்பத்தித் தொழில்களின் வரி, கட்டணம் உள்ளிட்ட செலவுகளை மேலும் குறைப்பதற்காக, சீனத் தொழில் மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் செயல்படும் என்று சின் கோபின் கூறினார்.

2019ஆம் ஆண்டு, வேலை வாய்ப்புகளை அளிப்பதில் சீனா நிர்பந்தனையை எதிர்கொள்கிறது. எனவே, மத்திய பொருளாதாரப் பணிக் கூட்டத்தில், வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சீன மனிதவளம் மற்றும் சமூக காப்புறுதித் துறையின் துணை அமைச்சர் ச்சியு சியாவ்பிங் இதை விவரித்தபோது,

வேலை வாய்ப்புகள் அளிக்கும் விதமாக, தொழில் நிறுவனங்களின் சுமையைக் குறைத்து, உயிராற்றலை அதிகரிப்பது முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று தெரிவித்தார்.

மேலும், தொழில் தொடங்கும் தனிநபருக்கு வழங்கப்படும் கடன் தொகையின் உச்ச வரம்பு, ஒரு லட்சம் யுவானிலிருந்து 1.5லட்சமாக உயரும். சிறிய தொழில் நிறுவனங்களுக்கு இந்த உச்ச வரம்பு 20 இலட்சத்தில் இருந்து 30லட்சமாக உயரும் என்றும் ச்சியு சியாவ்பிங் குறிப்பிட்டார்.

சீன வணிக அமைச்சரின் உதவியாளர் ரென் ஹோங்பின் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில்

2018ஆம் ஆண்டு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவு புதிய வரலாற்றுப் பதிவுகளை உருவாக்கியுள்ளன. 2019ஆம் ஆண்டு வெளிநாட்டு வர்த்தகத் துறையின் உயர் தரமான வளர்ச்சியை முன்னேற்றும் வகையில் சீனா புதிய முயற்சிகளை எடுக்கும் என்று கூறினார்.

இவற்றில், பன்னாட்டு மின்னணு வர்த்தகத்தின் 35 பன்னோக்க முன்னோடிப் பகுதிகளின் கட்டுமானத்தை முன்னெடுப்பது, இறக்குமதியை பெருக்கி, 2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியை நடத்துவது, வர்த்தகம் செய்வது எளிமையாகும் நிலையை மேம்படுத்துவது, தொழில் புரிவதற்கான சிறந்த சூழலை உருவாக்குவது ஆகிய நடவடிக்கைகளும் அடங்கும் என்று ரென் ஹோங்பின் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்