சர்வதேச ஒத்துழைப்பின் சிறந்த முன்மாதிரி: சூட்சோ தொழில் பூங்கா

மதியழகன் 2018-07-03 15:29:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சர்வதேச ஒத்துழைப்பின் சிறந்த முன்மாதிரி: சூட்சோ தொழில் பூங்கா

சூ ட்சோ தொழில் பூங்கா,  சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் சூ ட்சோ மாநகரத்தில் அமைந்துள்ளது. இந்த தொழில் பூங்கா, சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான  முதலாவது அரசு சார் ஒத்துழைப்புத் திட்டமாகும். 1994ஆம் ஆண்டு  அரசவையின் அனுமதி பெற்ற பிறகு, அதன் கட்டுமானப் பணி செயலுக்கு வந்தது. இதன் நிலபரப்பரளவு, சுமார் 278 சதுர கிலோமீட்டராகும். 8 லட்சத்துக்கும்  அதிகமான நிரந்தர குடிவாசிகள் இங்கு வாழ்கின்றனர்.

சர்வதேச ஒத்துழைப்பின் சிறந்த முன்மாதிரி: சூட்சோ தொழில் பூங்கா

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை இடைவிடாமல் நடைமுறைப்படுத்தி வரும்  சூ ட்சோ தொழில் பூங்கா பொருளாதாரச் சமூகத் துறையில் கவனத்தை ஈர்த்த பல சாதனைகளைப் படைத்துள்ளது. மேலும், வெளிநாடுகளுடன் கூட்டு நலன் பெறும் பொருளாதார ஒத்துழைப்புக்கான புதிய மாதிரியையும் அது உருவாக்கியுள்ளது.

சர்வதேச ஒத்துழைப்பின் சிறந்த முன்மாதிரி: சூட்சோ தொழில் பூங்கா

தற்போது, சூ ட்சோ தொழில் பூங்கா, சீனச் சீர்திருத்தம் மற்றும் திறப்பின் முக்கிய ஜன்னலாகவும், சர்வதேச ஒத்துழைப்பின் சிறந்த முன்மாதிரியாகவும் கருதப்படுகிறது.

12MoreTotal 2 pagesNext

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்