சூட்சோ தொழில் பூங்காவில் ஒலிம்பிக் விளையாட்டு மையம் (1/7)
1/7
தொழில் பூங்கா பற்றிப் பேசுகையில், ஒன்றிணைந்த தொழிற்சாலைகள் பற்றிய காட்சி உங்களின் மனதில் எழுந்திருக்கும். இருப்பினும் சீனாவின் ஜியாங் சு மாநிலத்தின் சூட்சோ மாநிலத்திலுள்ள தொழில் பூங்காவில் வேறுபட்ட காட்சிகளும் காணப்படுகின்றன. இங்கு தொழில் நிறுவனங்களைத் தவிர, பண்பாட்டு மையம், விளையாட்டு மையம் போன்றவைகளும் கட்டியமைக்கப்பட்டுள்ளன. சூட்சோ தொழில் பூங்காவில் ஒலிம்பிக் விளையாட்டு மைதானம் ஒன்றும் கட்டியமைக்கப்பட்டுள்ளது. திட்டப்படி, இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடல், விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம் ஆகியவை பொதுமக்களுக்குச் சேவை புரியத் தொடங்கியுள்ளன. இவ்வாண்டுக்குள் இம்மையம் முழுமையாக மக்களுக்குத் திறக்கப்படும். பொதுமக்கள் உடற்பயிற்சி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சூட்சோ விளையாட்டு ஒலிம்பிக் விளையாட்டு மையம் ஓய்வெடுப்பதற்கு உகந்த இடமாகவும் விளங்குகின்றது.