சூட்சோ பண்பாட்டு மற்றும் கலை மையம்(1/6)
Published: 2018-07-05 15:39:52
1/6
ஒரு பெரிய தொழில் பூங்காவில் ஒன்றிணைந்த தொழிற்சாலைகள் மட்டுமே இடம்பெறும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இருப்பினும், சூட்சோ தொழில் பூங்காவில் வேறுபட்ட காட்சிகள் காணப்படுகின்றன. உண்மையில், சூட்சோ தொழில் பூங்கா, மிக நவீனமான மற்றும் புதுமையான நகரமாகும். இங்கே, தொழில் நிறுவனங்களை தவிர, வணிக வாளகங்கள், குடியிருப்புகள், பொதுச் சேவை மையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், விளையாட்டு மையம் ஆகியவை எல்லாலம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொது மக்களின் மனவாழ்க்கையைப் பூர்த்தி செய்யும் விதமாக, சூட்சோ பண்பாடு மற்றும் கலை மையம் கட்டியமைக்கப்பட்டது. ஜின்ஜி ஏரியில் அமைந்துள்ள இந்த மையம், தலைசிறந்த வடிவமைப்பு உடையது. சூட்சோவின் உள்ளூர் தனிச்சிறப்புத்தன்மையும் இந்த வடிவமைப்பில் உணரலாம். சூட்சோ மாநகரும், சூட்சோ தொழில் பூங்காவும் கூட்டாக உருவாக்கிய சூட்சோ சேர்ந்திசை குழுவும் இங்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.