ட்செஜியாங் மாநிலத்தில் அதிசயக்க தக்க வளர்ச்சியை ஏற்படுத்த தொலைநோக்குத் திட்டம்

மதியழகன் 2018-07-17 18:15:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ட்செஜியாங் மாநிலத்தில் அதிசயக்க தக்க வளர்ச்சியை ஏற்படுத்த ஷிச்சின்பிங்கின் 8 முன்மொழிவுகள்

இவ்வாண்டு, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்து 40ஆவது ஆண்டு நிறைவு பெறுகிறது.  சீனாவில், சீர்திருத்தம் மற்றும் திறப்புக் கொள்கை செயல்படுத்தப்பட்ட முன்னோடிப் பகுதியாக ட்செஜியாங் விளங்குகிறது. மேலும், விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் சிறந்த பொருளாதார வலிமைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.

2003ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ட்செஜியாங் மாநிலக் குழுச் செயலாளராக ஷிச்சின்பிங் இருந்தபோது, ட்செஜியாங் மாநிலத்தின் வளர்ச்சி அனுபவங்களின் அடிப்படையில் எட்டு வளர்ச்சி மேம்பாடுகளை தொகுத்தார். மேலும், எதிர்கால வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டங்களை அவர் முன்மொழிந்தார்.திறப்பு நிலையை உயர்த்துதல், பசுமையான ட்செஜியாங்கைக் கட்டியமைத்தல், பெரிய பண்பாட்டு மாநிலத்தை உருவாக்குதல் உள்ளிட்ட 8 நடவடிக்கைகள்,  அவர் வழங்கிய முன்மொழிவில் உள்ளடக்கம்.

இதன்படி, ட்செஜியாங் மாநிலம்,  வளர்ச்சி வழிமுறையை மாற்றி மேம்படுத்தும் பாதையில் முன்னேறிச் செல்கிறது. பல்வேறு பணிகள் புதிய கட்டத்தில் காலடியை எடுத்து வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வலிமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2017ஆம் ஆண்டு, அதன் மொத்த உற்பத்தி மதிப்பு, 517,680 கோடி யுவானை எட்டியது. 2002ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, சராசரியாக, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு இலட்சம் கோடி யுவான் அதிகரித்து வருவது என்ற விகிதத்தில் வளர்ச்சி அடைகிறது. 

பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் மக்கள் வருமானத் தொகை வரிசையில் ட்செஜியாங் முதலிடம் வகிக்கிறது. 

வெளிநாட்டுத் திறப்பு நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, 2017ஆம் ஆண்டின் இறுதி வரை, உலகின் 500 முன்னணி பெரிய நிறுவனங்களில் 179 நிறுவனங்கள், ட்செஜியாங் மாநிலத்தில் நிறுவப்பட்டன.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தில் தொடர்பு மையம். நிங்போ மாவட்டத்திலுள்ள ட்சோ ஷான் துறைமுகம், 2017ஆம் ஆண்டு 100 கோடி டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. அதன் திறன், உலகின்  துறைமுகங்களின் தரவரிசையில் தொடர்ந்து 9ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது. மேலும்  ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவின் நெடுகிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கும் ட்செஜியாங் மாநிலத்திக்கும் வர்த்தகத் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

எண்முறைப் பொருளாதாரம்  விரைவாக வளர்ந்து வருகிறது. அலிபாபா உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் ட்செஜியாங்கில் தொடங்கப்பட்டு வளர்ந்து வருகின்றன.முழு மாநிலத்தின் எண்முறைப் பொருளாதாரம், இலட்சம் கோடி யுவானைத் தாண்டியது. பெருந்தரவு,   மேகக் கணிமை, நுண்ணறிவுத் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் சீனாவின் முன்னிலை வகிக்கின்றன.

 

 

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்