சென்ட்சேன் நகரின் அறிவியல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சி

வாணி 2018-05-22 17:04:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

30 ஆண்டுகளுக்கு முன்பாக, சென்ட்சேன் நகரம் உருவாக்கப்பட்டத் துவக்கத்தில், இந்நகரில் பல்கலைக்கழகங்களோ அறிவியல் ஆய்வகங்களோ இல்லை. இதனையடுத்து 2017ஆம் ஆண்டு, சென்ட்சேன் நகரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4 விழுக்காடு பகுதி அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டது. இந்த அளவு, உலகில் முன்னணியில் இருக்கும் தென் கொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் நிலைமையைப் போன்றதாகும். தற்போது, இந்நகரில் உள்ள தேசிய நிலை உயர் மற்றும் புதிய தொழில் நுட்பத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இத்துறையின் அதிகரிப்பு மதிப்பு சென்ட்சேன் நகரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 30 விழுக்காட்டுக்கும் மேலாக உள்ளது. அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் சென்ட்சேன் நகரில் வளர்ச்சிக்கான தூணாக மாறியுள்ளது.

ஹே ச்சியேன் குய் என்பவர் சென்ட்சேன் தெற்கு அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியாக பணி புரிகின்றார். அதேவேளையில், ஒரு அறிவியல் தொழில் நுட்பக் கூட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநராகவும் உள்ளார். 2017ஆம் ஆண்டு அவரது நிறுவனம் ஆசியாவில் முதன்முறையாக உலகின் முன்னேறிய தரமுடைய 3ஆவது தலைமுறை மரபணுக்களுக்கான வரிசைமுறை இயந்திரத்தை கண்டறிந்துள்ளது. 21.8 கோடி யுவான் முதலீட்டைப் பெற்ற பிறகு, சென்ட்சேன் நகரில் ஆசியாவில் மரபணுக்களுக்கான வரிசைமுறை இயந்திரங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் முதலாவது ஆலை நிறுவப்படும். இதன்விளைவாக, மனித மரபணுக்களின் வரிசைமுறையை அறியும் செலவும் முன்பு இருந்த 1000 அமெரிக்க டாலரிலிருந்து 100 டாலராக குறைக்கப்படும். இதனால், சீனாவில் மட்டுமல்லாமல், முழு உலகிலுமுள்ள அடிமட்ட மருத்துவமனைகளிலும் இத்தகைய கள ஆய்வு மேற்கொள்ளலாம் என்று ஹே ச்சியேன் குய் பெருமையாக கூறினார்.

டாக்டர் சென்நிங் 2014ஆம் ஆண்டு செட்சேன் நகரில் நிறுவனத்தை ஆரம்பித்து, உலகில் முதலாவது இயக்கநிலை முக அடையாளத் தொகுதியைக் கண்டறிந்தார். இதன்மூலம், இலட்சக்கணக்கான மனித முகங்களிலிருந்து சில வினாடிகளுக்குள் குறிப்பிட்ட ஒருவரின் முகத்தைத் தேர்ந்தெடுத்து அவருடைய செயல்பாட்டு நெறியை உருவாக்க முடியும். இந்தத் தொகுதி காவற்துறையில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இதுவரை 4000க்கும் அதிகமான வழக்குகள் துப்புத்துலக்கப்பட்டுள்ளன. காணாமல் போன பல குழந்தைகளும் முதியோர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

சென்ட்சேன் நகரில் சூழ்நிலை தொழில் நுட்பப் பணியாளர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் டாக்டர் சென்நிங் கூறினார்.

தற்போது சென்ட்சேன் நகரின் மக்கள் தொகை சுமார் 2 கோடியாகும். அவர்களில் பல்வகை துறைகளைச் சேர்ந்த திறமைசாலிகளின் விகிதாசாரம் 25 விழுக்காட்டுக்கு மேலாகும். சென்ட்சேன் நகரின் நெடுநோக்கு வளர்ச்சியில் தற்சார்புப் புத்தாக்க ஆற்றல் முதன்மை இடத்தில் வகிக்கின்றது என்று கம்யூனிஸ்ட் கட்சி சென்ட்சேன் நகரின் பொதுச் செயலாளர் வாங் வேய் ட்சொங் தெரிவித்துள்ளார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்