வாகனங்களின் இறக்குமதி வரியைக் குறைக்கும் சீனாவின் முயற்சி

2018-05-23 14:36:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன நிதி அமைச்சகத்தின் இணைய தளம்

சீன நிதி அமைச்சகத்தின் இணைய தளம்

2018ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 1ஆம் தேதி முதல், வாகனங்கள் மற்றும் வாகன பாகங்களின் இறக்குமதி வரி குறையும் என்று சீன நிதி அமைச்சகம் 22ஆம் நாள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அதன்படி, முன்பு வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட  25 மற்றும் 20 விழுக்காட்டு இறக்குமதி வரி, ஜுலை 1ஆம் தேதி முதல், 15 விழுக்காடாக குறைக்கப்படும். வாகனத்தின் பாகங்களுக்கு விதிக்கப்பட்ட வரி 6 விழுக்காடாக குறைக்கப்படும். சீனாவின் இந்த முயற்சி, இறக்குமதியை அதிகரித்து, நுகர்வோரின் பல்வகை தேவையை பூர்த்தி செய்ய உதவும். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பை மேலும் விரிவாக்குவதற்கான சீனாவின் மனவுறுதியை இது காட்டுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்த சுங்க வரிக் குறைப்பு பற்றி சீன நிதி அமைச்சகத்தின் பொறுப்பாளர் செவ்வாய்க்கிழமை பேசுகையில்

சீனா, பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையைப் பேணிக்காத்து வருகிறது. சீனா முனைப்புடன் செயல்பட்டு, வாகனங்களின் இறக்குமதி வரியை பெருமளவில் குறைப்பது, சீர்திருத்தம் மற்றும் திறப்பு நிலையை விரிவாக்கும் முக்கிய நடவடிக்கையாகும் என்று தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக வளர்ந்து வந்த பிறகு, வாகனங்களின் விற்பனை எண்ணிக்கையில் சீனா தொடர்ந்து 9ஆவது ஆண்டாக உலகில் முதலிடம் வகிக்கிறது.  இது வரை,  கிட்டத்தட்ட அனைத்து புகழ்பெற்ற சர்வதேச வாகன நிறுவனங்களும் சீனாவுடன் கூட்டுறவு நிறுவனங்களை அமைத்து, நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், தற்போதைய சீனாவின் வாகனத் தொழிலுக்கு சர்வதேச போட்டியில் ஈடுபடும் திறன் குறிப்பிட்ட அளவில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் இறக்குமதி வரியைக் குறைக்கும் சீனாவின் முயற்சி

2017ஆம் ஆண்டு, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 12லட்சத்து 16ஆயிரம் ஆகும். இந்த எண்ணிக்கை, 16.8 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சீன வாகனப் போக்குவரத்து சங்கம் வெளியிட்ட புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

சுங்க வரிக் குறைப்பு, சீனாவின் வாகனத் தொழில் துறைக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அது, சீனாவில் வெளிநாட்டு வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க உதவும் என்று தொடர்புடைய வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

வரிக் குறைப்பு பற்றிய அறிவிப்புக்கு பன்னாட்டு வாகன நிறுவனங்கள் பல  வரவேற்பு தெரிவித்ததோடு, விற்பனை விலையை குறைக்கக் கூடும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்