ட்செஜியாங் மாநிலத்தில் சமமான வளர்ச்சிப் பாதை

மதியழகன் 2018-07-20 12:55:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் உற்பத்தி மதிப்பின் தரவரிசையில் சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ட்செஜியாங் மாநிலம் தொடர்ந்து 22-வது ஆண்டாக 4ஆவது இடத்தில் உள்ளது. ட்செஜியாங் மாநிலத்தில் கிராமவாசிகளின் சராசரி வருமானம், பல ஆண்டுகளாக சீனாவில் முதலிடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

15ஆம் ஆண்டுகளுக்கு முன்பு, 2003ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ட்செஜியாங் மாநிலக் குழுச் செயலாளராக பதவியேற்றபோது, ஷிச்சின்பிங், “எட்டு எட்டு தொலைநோக்கு” எனும் வளர்ச்சித் திட்டத்தை முன்வைத்தார். இந்தத் தொலைநோக்குத் திட்டத்தின் வழிகாட்டுதலின்படி, நகரப்புறத்துக்கும் கிராமப்புறத்துக்கும் இடையேயான சமமான வளர்ச்சிப் பாதையில் முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்து, தற்போது ட்செஜியாங் மாநிலம் சாதனைக படைத்துள்ளது.

ட்செஜியாங் மாநிலத்தின் தைட்சோ மாவட்டத்தில் உள்ள ஹோவ்ஆன் கிராமத்தில், சுரங்கத் தொழில் நீண்டகாலமாக நடந்து வந்தது. இதனால், பத்துக்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்பு, இக்கிராமத்தின் சுற்றுச் சூழல் சீர்குலைக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் தர மேம்பாட்டுத் திட்டம் ஒன்று நடைமுறைக்கு வந்த பின், சுரங்கம் மூடப்பட்டது. தற்போது வரை, ஹோவ் ஆன் கிராமத்தில் சீரான சுற்றுச் சூழல் காணப்படுகிறது. மேலும், இது, சீனாவின் 2ஆவதுத் தேசிய நிலை சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.

அழகிய கிராமத்தை முனைப்புடன் கட்டி அமைக்கும் அதேசமயத்தில், நகரப்புறம்-கிராமப்புறம் இடையேயான சமமான வளர்ச்சியை அடைவதற்காகவும் ட்செஜியாங் முயற்சி எடுத்து வருகிறது. நகரப்புறங்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பொது சேவைகள் ஆகியற்றின் இணைப்பை, கிராமப்புறங்கள் பெறும் விதமாக, ட்செஜியாங் செயல்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, இவ்வாண்டு ஜுன் மாதம், ஹுட்சோ மாவட்டத்தில் நகர-கிராமப் பேருந்துப் போக்குவரத்துத் திட்டம் செயலுக்கு வந்துள்ளது. இந்தப் பேருந்து பயணத்திற்கு, 2 யுவான் மட்டும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சுலுகை நடவடிக்கை மூலம், பயணிகளுக்கு 80 விழுக்காட்டுக் கட்டணம் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

2007ஆம் ஆண்டு மார்ச் திங்கள், ட்செஜியாங்கின் நகரப்புறம் மற்றும் கிராமப்புறத்துக்கிடையேயான ஒருங்கிணைந்த வளர்ச்சி பற்றி ஷிச்சின்பிங் பேசுகையில்

நகரப்புறம் மற்றும் கிராமப்புறம் இடையேயான சமமான வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம். இதனிடையில், கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் கல்விப் பயிலும் வாய்ப்பை உறுதிச் செய்யும் வகையில், 2006ஆம் ஆண்டு, நகர மற்றும் கிராமப்புறக் கட்டணக் கல்வி பெறும் மாணவர்கள் அனைவருக்கும் கல்விக் கட்டணம் நீக்கப்படும். சுகாதாரத் துறையில் விவசாயி ஆரோக்கியத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.

இந்த எட்டு எட்டு தொலைநோக்குத் திட்டத்தின் படியாக ட்செஜியாங் செயல்பட்டு, அதன் நகரப்புறம் மற்றும் கிராமப்புறம் இடையேயான ஒருங்கிணைந்த வளர்ச்சி சீனாவில் முன்னிலையில் இருக்கிறது. தற்போது, ட்செஜியாங்கில் நகரப்புறம் மற்றும் கிராமப்புறத்தில் மக்களின் வருமான இடைவெளி குறைந்து உள்ளது. கிராமங்களின் தோற்றம் விரைவாக மாறி வருகிறது. பொதுச் சேவைத் தரம் சிறந்ததாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்