நாட்டின் எதிர்காலம் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ள சீனர்கள்

மதியழகன் 2018-11-13 19:30:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிட்டனின் எகானாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் என்ற நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு ஆய்வில் 91.4 விழுக்காட்டு சீனர்கள் நாட்டின் எதிர்காலம் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 10 ஆண்டுகளில் தொடர்ந்து முன்னேறி வரும் சீனா, மேலும் அருமையான சமூகத்தை உருவாக்குவதற்குரிய எதிர்காலத்தை அடையும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் சீனப் பொருளாதாரத்தின் நிலையான மற்றும் விரைவான வளர்ச்சி, சீனச் சமூகத்தின் தரமிக்க மற்றும் ஒருங்கிணைந்த  வளர்ச்சி,  நகர மேலாண்மை, அடிப்படை வசதிக் கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்டப்படியான ஆட்சி, ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல துறைகளில்  காணப்பட்டுள்ள முன்னேற்றப் போக்கே, சீன மக்கள்  எதிர்காலம் மீது நம்பிக்கை காட்டுவதற்கான முக்கிய காரணிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்