தனியார் தொழில் நிறுவனங்கள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு ஷிச்சின்பிங் தெரிவித்த கருத்துகள்

ஜெயா 2018-11-02 10:05:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தனியார் தொழில் நிறுவனங்கள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு ஷிச்சின்பிங் தெரிவித்த கருத்துகள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவக் ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் நவம்பர் முதல் நாள், பெய்ஜிங்கில் தனியார் தொழில் நிறுவனங்கள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி, முக்கிய உரை நிகழ்த்தினார். அப்போது, அவர் சீனப் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் பொது உடைமை சாரா பொருளாதாரத்தின் தகுநிலையும் பங்கும் மாறவில்லை அதே போன்று பொது உடைமை சாரா பொருளாதாரத்தின் வளர்ச்சியை சீனா உறுதியாக ஊக்குவித்து, ஆதரித்து, வழிக்காட்டும் கொள்கையும் மாறவில்லை என்று குறிப்பட்டார். அதோடு பொது உடைமை சாரா பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு சிறந்த சூழலையும் மேலதிக வாய்ப்புகளையும் உருவாக்கும் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் சீனா தொடர்ந்து வளர்த்தெடுக்கும் என்பதை ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். ஓரளவு வசதியான சமூகத்தைப் பன்முகங்களிலும் உருவாக்கி, சோஷலிச நவீனமயமாக்க நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைக்கும் புதிய முன்னேற்றப் போக்கில், சீனாவின் தனியார் தொழில் நிறுவனங்கள், மேலும் வலிமையாக மாற வேண்டுமே தவிர, அதிலிருந்து பின்வாங்கக் கூடாது. மேலும் விசாலமான அரங்கை நோக்கி நடைபோட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கலந்துரையாடல் கூட்டத்தில், 10 தொழில் முனைவோர்கள் உரை நிகழ்த்தி, புதிய நிலைமையில் தனியார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பற்றி கருத்துக்களை வழங்கினர். அனைவரின் உரைகளையும் கேட்டறிந்த பிறகு, ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணிக்குப் பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாடு மற்றும் கொள்கையின் வழிகாட்டலில் பொது உடைமை சாரா பொருளாதாரம் சிறப்பாக வளர்ந்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 11ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வுக்குப் பின், உடைமை முறை பற்றிய மரபுவழி சந்தையில் கட்டுப்பாட்டை தகர்த்து, பொது உடைமை சாரா பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு கதவைத் திறந்து வைத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 40 ஆண்டுகளாக, நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றும் இன்றியமையாத ஆற்றலாக சீனாவின் தனியார் தொழில் நிறுவனம் மாறியுள்ளது. எமது சோஷலிச சந்தை பொருளாதாரத்தை வளர்ப்பது, சர்வதேச சந்தையில் வாய்ப்புகளை தேடுவது முதலியவற்றில் முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் ஷிச்சின்பிங் கூறினார்.

பொது உடைமைப் பொருளாதாரத்தை நன்றாக வளர்ப்பதை நாம் வலியுறுத்துவது, பொது உடைமை சாரா பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஊக்குவித்து, ஆதரித்து, வழிக்காட்டுவதற்கு எதிரானது அல்ல என பதையும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த சில ஆண்டுகளாக, சில தனியார் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிப் போக்கில், சந்தை, நிதித் திரட்டல், முறை மாற்றம் முதலிய இன்னல்களைச் சந்தித்துள்ளன. அவற்றுக்கான காரணங்கள் பல துறைகளுடன் தொடர்புடையவை. ஆனால், இவை வளர்ச்சிப் போக்கில் தீர்க்கப்படுவது உறுதி என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சீனப் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றப் போக்கில், தனியார் தொழில் நிறுவனங்களுக்கு மேலும் சிறந்த வளர்ச்சிச் சூழலை உருவாக்கி, வளர்ச்சியில் அவை சந்தித்த இன்னல்களைத் தீர்க்க உதவியளிக்க வேண்டும். தனியார் தொழில் நிறுவனங்கள் அவற்றின் புத்தாக்க திறன் மற்றும் உயிராற்றலை மேலும் வெளிக்கொணரச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்