பிரிக்ஸ் வணிக மன்றக் கூட்டத்தின் நிறைவு விழா

சிவகாமி 2019-11-14 11:29:54
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் வணிக மன்றக் கூட்டத்தின் நிறைவு விழா நவம்பர் 13ஆம் நாள் பிரேசிலியாவில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். பிரேசில் அரசுத் தலைவர், ரஷிய அரசுத் தலைவர், இந்திய தலைமையமைச்சர், தென் ஆபிரிக்க அரசுத் தலைவர் ஆகியோர் இந்த நிறைவு விழாவில் கலந்து கொண்டனர்.

ஷிச்சின்பிங் பேசும் போது, அண்மையில், உலகில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வாய்ப்புகளும் அறைகூவல்களும் நிறைந்திருக்கின்றன. பிரிக்ஸ் நாடுகளின் புதிய தொழில் புரட்சிக்கான கூட்டாளி உறவு, அடுத்த கட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பிலுள்ள முக்கிய பகுதியாகும். தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பை, புதிய தொழிற் புரட்சிக்கான கூட்டாளி உறவுடன் ஒன்றிணைத்து, புத்தாக்கம், எண்ணியல் பொருளாதாரம், பசுமை பொருளாதாரம் முதலிய துறைகளில் மேலும் பெரும் சாதனைகளைப் பெறுவதன் மூலம், 5 நாடுகளின் பொருளாதாரம், உயர் தர வளர்ச்சியை நனவாக்கும் வகையில் பாடுபட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

சீனாவின் வளர்ச்சி உலகத்தின் வாய்ப்பாகும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானம், உயர் தர வளர்ச்சிக் கட்டத்தில் நுழைந்துள்ளது. தொழில் முனைவோர், இந்த வாய்ப்புகளை இறுகப்பற்றி, மேலதிக ஒத்துழைப்புச் சாதனைகளைப் பெற வேண்டும் எனும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்