ஐ.நாவிலுள்ள பங் லி யுவானின் உரை

கலைமணி Published: 2018-09-28 14:56:54
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

செப்டம்பர் 26ஆம் நாள், 73ஆவது ஐ.நா பொது பேரவையின் காசநோய் தடுப்பு பற்றிய உயர்நிலை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் துணைவியாரும், உலக சுகாதார அமைப்பின் காசநோய் மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்பு நல்லெண்ண தூதருமான பெங்லியுவான் காசநோய் தடுப்புப் பணியின் சிறப்புப் பிரதிநிதியாக, இக்கூட்டத்தின் துவக்கவிழாவில் காணொலி வழி உரை வழங்கினார்.

2007ஆம் ஆண்டு காச நோய் தடுப்புக்கான சீனாவின் சிறப்புத் தூராக நான் நியமிக்கப்பட்டேன். 2011ஆம் ஆண்டு, நல்லெண்ணத் தூதராகவும் மாறினேன். இது, என்னால் பேணி மதிப்பிடப்பட்டு வரும் கடமையாகும். கடந்த பத்துக்கும் அதிகமான ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 24-ஆம் நாள், காச நோய் தடுப்பு பற்றிய மக்களின் அறிவாற்றலை உயர்த்தி, நடத்தையை மாற்றி, பொது மக்கள் ஆக்கப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்த நோய் எளிதாக மரவும் குடியிருப்பு பிரதேசங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றேன்.

இவ்வாண்டு, நான் சீனாவின் மத்திய பகுதியிலுள்ள ஹுபெய் மாநிலதுக்குச் சென்றிருந்தேன். நான், மாணவர்களுடன் இணைந்து, காச நோய் தொடர்பான முக்கிய விழிப்புணர்வையும், உடல் நலத்துடன் கூடிய வாழ்க்கை வழிமுறையையும் பகிர்ந்து கொண்டேன். உள்ளூர் கிராமம் ஒன்றில், காச நோய் முழுமையாகக் குணமடைந்த ஒருவரை சந்தித்தேன். அவர் காச நோய் தடுப்புப் பணியின் பிரசார உறுப்பினராக மாறுவதற்கு ஊக்கமளித்தேன். அப்படி அவர் மாறினால், அவர் மேலும் அதிகமானவர்களுடன், காய நோய் தடுப்பு பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்று கருதுகின்றேன்.

இப்பயணத்தின்போது, காச நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்ட தலைச்சிறந்த பணியாளர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டேன். இந்தப் பணியாளர்களில் பெரும்பாலானோர் அடிமட்ட மக்களுக்குச் சேவை புரிபவர்கள். அவர்கள் பற்றிய பல சிறப்பான கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இங்கே, அவர்களின் ஒருவரின் கதையைக் கூற விரும்புகின்றேன். அவர் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் அடிமட்ட மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குபவர் ஆவார். உள்ளூர் பிரதேசத்தின் காச நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது அவருடைய முக்கியப் பணியாகும். 2008ஆம் ஆண்டு சிச்சுவானில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்த போது, அவரது சொந்த ஊர், நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும், நிலநடுக்கத்துக்குப் பின், அவர் இயன்றளவில், முன்பு கவஇத்து வந்த 540 நோயாளிகளுடனான தொடர்பை வலுப்படுத்தி வந்தார். அபாயத்தைப் பொருட்படுத்தாமல், சுமார் 20 நாட்களாக, மருந்து இல்லாத நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை அவர் அனுப்பினார். காச நோயாளிகளுக்கு மருந்து சிகிச்சையின் முக்கியத்துவத்தை அவர் மிகவும் தெளிவாக அறிந்து கொண்டுள்ளார். அவருடைய முயற்சி மூலம், அவர் கண்காணித்து வந்த 540 நோயாளிகளும் முழுமையாக குணமடைந்துள்ளனர். இந்நோயாளிகளுள் எவரும், மேலும் சிக்கலான நிலைமை அடையவில்லை. இது, ஊக்கம் தரும் செய்தியாக அமைந்துள்ளது.

தவிர, ஊடகப் பணியாளர்களுக்கும், இந்த இலட்சியத்துக்கு ஆதரவு அளித்து வருபவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நாங்கள், சீனாவின் காச நோய் தடுப்புத் திட்டப்பணியில் ஈடுபட்டு வரும் 7இலட்சத்துக்கும் மேலான தன்னார்வலர்களுடன் இணைந்து, கூட்டாக முயற்சி மேற்கொண்டு வருகின்றோம். 75விழுக்காட்டு மக்கள் தொகை, காச நோய் தொடர்பான அறிவாற்றலை அதிகரித்து, அவர்களுக்கு உரிய அறிவை புகட்டி வருகின்றோம். இதன் விளைவாக, மேலும் அதிகமான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

சீனாவில் காசநோய் தடுப்புக்கான திட்டப்பணியின் பெரும் முன்னேற்றத்தை நான் நேரில் கண்டுள்ளேன். சிறப்பான மருத்துவ சேவையின் மூலம், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் பயனுள்ள சிகிச்சைகளை வழங்குகின்றோம். சில பிரதேசங்களில், காசநோய் தடுப்பு, வறுமை ஒழிப்புத் திட்டத்தில் முக்கியப் பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நோய் ஏற்படும் வாய்ப்புகளும் நோயாளிகளின் உயிர் இழப்பு விகிதமும் குறைக்கப்பட்டு வருகின்றது.

வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்ட போது, உள்ளூரில் காசநோய் நிலைமையை ஆய்வு செய்வது எனது நிகழ்ச்சி நிரலில் முக்கியமான ஒன்றாகும். பல்வேறு நாடுகளின் அரசுகள், சர்வதேச அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் கூட்டு முயற்சி மூலம், மேலதிக நோயாளிகள் தேவைப்படும் உதவிகளைப் பெறுவதைக் கண்டு மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆனால், கடுமையான அறைகூவல்கள் இன்னும் நிலவுகின்றன. பல்நோக்கு-உயிரி எதிரி-எதிர்ப்புத் தன்மை வாய்ந்த காசநோய் இன்னும் ஒரு மாபெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது.

காசநோய் தடுப்புக்கான நெடுநோக்குத்திட்டத்தை உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ளது. உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உங்கள் அனைவரையும் எங்களது அணியில் சேர அழைக்கின்றேன்.

நாம் ஒன்றாக இணைந்து இந்நோயைத் தோற்கடித்து இதனால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

இம்மாநாடு வெற்றிக்கரமாக நடைபெற வாழ்த்துக்கின்றேன்.

நன்றி!

இந்த செய்தியைப் பகிர்க