கிரேக்கத்தின் பெனகி அருங்காட்சியகத்தில் பெங் லீயுவான் பயணம்

பூங்கோதை Published: 2019-11-12 10:21:55
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

நவம்பர் 11ஆம் நாள் முற்பகல், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவி பெங் லீயுவான் அம்மையார், கிரேக்க அரசுத் தலைவரின் மனைவி விளாசியா பாவ்லோபோலோவுடன் சேர்ந்து, ஏதென்சின் மையப் பகுதியிலுள்ள பெனகி அருங்காட்சியகத்தில் பயணம் மேற்கொண்டார்.

அப்போது பெங் லீயுவான் கூறுகையில், சீன-கிரேக்க நாகரிகங்களின் ஒருங்கிணைப்பை இந்தத் தொல் பொருட்கள் வெளிப்படுத்துகின்றன. பண்டைக்காலம் தொட்டே கீழை மற்றும் மேலை நாடுகளுக்கிடையில் இருந்து வரும் நெருங்கிய பரிமாற்றத்தை இவை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானம் பற்றிய சீனாவின் முன்மொழிவுடன் இது தொடர்புடையது என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க