சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டா தொங் நகரில் ஆய்வுப் பயணம்

பூங்கோதை Published: 2020-05-12 15:19:31
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

சீனாவின் இரு கூட்டத்தொடரை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஷான்சி மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார். அவர் 2 மாதங்களுக்குள் 4 மாநிலங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 2020ஆம் ஆண்டு, முதலாவது நூறு ஆண்டு இலக்கை நனவாக்குவதற்கான கடைசி ஆண்டாகும். இந்த முக்கியக் கட்டத்தில் அவர் ஆய்வுப் பயணம் மேற்கொள்வது இந்த இலக்குக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. டா தொங் பயணம், அவரது ஷான்சி பயணத்தின் முதலாவது இடமாகும்.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், மஞ்சள் அல்லி பயிரிடுதல் தளத்தில் கிராமவாசிகளுடன் உரையாடினார். அங்கு அவர் உரையாடுகையில், இத்தொழில் துறையைச் செவ்வனே வளர்க்க வேண்டும். மஞ்சள் லில்லி பயிரிடுதலின் மூலம் உள்ளூர் மக்கள் வறுமையிலிருந்து விடுபட முடியும் என்றார்.

யுன் காங் கற்குகை காட்சியிடத்தில், தொல் பொருள் பாதுகாப்பு பற்றிய நிலைமையை அவர் அறிந்து கொண்டார். அவர் கூறுகையில், சீனப் பண்பாட்டின் தனிச்சிறப்பையும், சீன-வெளிநாட்டுப் பண்பாட்டின் பரிமாற்றத்தின் வரலாற்றையும் யுன் காங் கற்குகை வெளிப்படுத்தியுள்ளது. இதைப் பாதுகாக்கும் அடிப்படையில், நன்றாக ஆய்வு செய்து பயன்படுத்த வேண்டும் என்றார். மேலும், ஷி ச்சின்பிங் பயணிகளுடன் அன்பாக உரையாடினார்.

இந்த செய்தியைப் பகிர்க