சிறு படகு முதல் பெரும் கப்பல் வரை

வான்மதி Published: 2020-06-30 17:25:14
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

99 ஆண்டுகளுக்கு முன், நான்ஹு ஏரியில் இருந்த சிவப்புப் படகிலிருந்து சீனத் தேசத்தின் மாபெரும் மலர்ச்சிக்கான பயணம் தொடங்கியது.

அப்போது முதல் சீனத் தேசத்தின் தலைவிதி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக பின்னி பிணையத் தொடங்கியது.

மக்களை நெருக்கமாக சார்ந்திருப்பது, மக்களுக்கு தொடர்ந்து நன்மை புரிவது, மக்களோடு உறுதியுடன் நிற்பது ஆகியவற்றின் காரணமாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மீதான பொது மக்களின் நம்பிக்கையும், அதற்கான ஆதரவும் அசையாமல் உறுதியாக இருக்கிறது.

மாபெரும் கடமைக்குத் தோள் கொடுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, கொந்தளிப்பான கால ஓட்டத்திலும்கூட வலுவடைந்து வருகிறது.

60க்கு குறைவான உறுப்பினர்களைக் கொண்ட மறைமுக கட்சி என்ற நிலையிலிருந்து உலகளவில் மிகப் பெரிய ஆளும் கட்சியாக வளர்ந்துள்ளது.

தற்போது பெருமளவு என்ற நிலையிலிருந்து வலிமை என்ற நிலைக்கு முன்னேறி வரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தயக்கமின்றி சீனத் தேசத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். சீன மக்களின் இன்பத்துக்கும் சீனத் தேசத்தின் மலர்ச்சிக்கும் பாடுபட்டு வருகின்றனர்.

மூல முதலான ஆசையை மறக்காமல், கடமையை உறுதியுடன் பின்பற்றி, தோழர் ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட கட்சி கமிட்டி, உண்மையைக் கடைப்பிடித்து, கால ஓட்டத்தின் முன்னணியில் துணிச்சலுடன் நின்று, சீன மக்களின் மாபெரும் கனவுடன் பெரிய கப்பல் போன்று இருக்கும் சீனத் தேசத்தின் பயணத்தைத் தொடர்ந்து முன்னேற்றி வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க