ஹாங்காங்கிற்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல் பயனில்லை

Published: 2020-06-30 23:54:01
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

ஹாங்காங்கின் சிறப்பு வர்த்தக தகுநிலையை நீக்குவதென அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. அது பற்றி ஹாங்காங்கின் முன்னாள் நிர்வாக அதிகாரி லியாங் ட்சென்யிங் பேட்டியளிக்கையில், வழக்கம் போல் அமெரிக்கா மேற்கொண்ட அச்சுறுத்தல் இதுவாகும். 1997ஆம் ஆண்டுக்கு முன் ஹாங்காங்கில் திறமைசாலிகள் மற்றும் மூலதனத்தின் வெளியேற்றம் ஏற்பட்டது. ஆனால் சமீபத்தில் ஹாங்காங்கில் நிகழ்ந்த பிரச்சினைகளைச் சமாளிக்கும் வகையில் நடுவண் அரசு தொடர்புடைய சட்டத்தை வகுத்து அதனைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதோடு ஹாங்காங் சமூகம் நிதானத்துக்குத் திரும்பி வருகிறது. கொவைட்-19 நோய் பாதிப்பு இருந்தாலும், ஹாங்காங்கின் பொருளாதாரம் ஒட்டுமொத்த நிலையில் சீராக உள்ளது. அமெரிக்கா அறிவித்த கொள்கைகள் ஹாங்காங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என கருதுகின்றேன் என்று கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க