வூஹான் ஆய்வகத்திலிருந்து வைரஸ் பரவவில்லை – வௌவால் பெண்

பண்டரிநாதன் Published: 2020-08-26 19:37:54
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

சீனாவின் வூஹான் வைரஸியல் கழகத்திலிருந்து புதிய ரக கரோனா வைரஸ் பரவவில்லை என்று வௌவால் பெண் என அழைக்கப்படும் வைரஸியல் நிபுணர் ஷி ஜெங் லி தெரிவித்துள்ளார்.

சீனாவின் சிஜிடிஎன் ஊடகத்துக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், வூஹான் ஆய்வகத்திலிருந்து இவ்வைரஸ் பரவியது எனக் கூறப்படுவது முற்றிலும் பொய். ஜனவரியின் தொடக்கத்தில் இந்த வைரஸின் மரபணு வரிசையை நாங்கள் ஆராய்ச்சி செய்தபோது எங்களிடம் இருந்து மாதிரிகளின் மரபணு தொகுதியுடன் ஒத்துப்போகவில்லை. அதனால், இது புதிய ரக கரோனா வைரஸ் என்பதை உறுதி செய்தோம். வூஹான் வைரஸியல் கழகத்தில் உள்ள பி3 ஆய்வகம் 10 ஆண்டுகளாகவும், பி4 ஆய்வகம் 2 ஆண்டுகளாகவும் இயங்கி வருகிறது. மிகவும் பாதுகாப்பாக உள்ளது; இதுவரை எவ்வித கசிவும் ஏற்படவில்லை என்பதை புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன. டிரம்ப் போன்ற அமெரிக்க அரசியல்வாதிகள் கூறுவதெல்லாம் பொய், அரசியல் ஆதாயத்துக்காக அவர்கள் இத்தகைய புரளியைப் பரப்புகின்றனர் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க