ஆவணப்படம்: ஒற்றுமையுடன் தொற்றை எதிர்த்து போராடுவது-5

Published: 2020-09-08 18:16:13
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

5ஆம் பகுதி - பொது எதிர்காலம்


சீனாவில் விரைவாகப் பரவிய புதிய ரக கரோனா வைரஸ் தொற்று நோய், மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நெருக்கடியைச் சமாளித்து, மக்களைச் சார்ந்திருப்பது என்ற முறையில், மக்கள் முதன்மை என்ற குறிக்கோளுடன், சீனா தொற்று நோயை எதிர்த்துப் போராடி வருகிறது.

இதில், மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் உயிரை மீட்கும் பணியில் சேவையாற்றினர். மேலும், நாடளவில், 40லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பணியாளர்கள், நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்புப் பணியில் கலந்து கொண்டனர். சீன மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, ஒன்றாக முயற்சி செய்து, பரஸ்பரம் உதவி வருகின்றனர். மேலும், நோய் உலகளவில் பரவி வரும் இச்சூழலில், சீனா இயன்ற அளவில் பிற நாடுகளுக்கு நோய் தடுப்பு உதவி அளித்து, பல்வேறு தரப்புகளுடன் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறது.

வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் , மருத்துவப் பணியாளர்களின் போராட்டம், வலுவான தடுப்புக் கோடு, கூட்டு முயற்சிகள் மற்றும் உதவிகள், பொது எதிர்காலம், மக்களே முதன்மை ஆகிய 6 பகுதிகளாக, ஒற்றுமையுடன் தொற்றை எதிர்த்து போராடுவது பற்றிய ஆவணப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த ஆவணப் படத்தில் புதிய கரோனா வைரஸ் தொற்று நோயைச் சீனா எவ்வாறு எதிர்த்துப் போராடி முன்னேற்றத்தைப் பெற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த செய்தியைப் பகிர்க