சீன மக்கள் குடியரசின் தேசிய பதக்கம் மற்றும் மதிப்புறு விருது வழங்கும் விழாவில் ஷி ச்சின்பிங்கின் உரை

பூங்கோதை 2019-09-29 16:24:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மக்கள் குடியரசின் தேசிய பதக்கம் மற்றும் மதிப்புறு விருது வழங்கும் விழா செப்டம்பர் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் விமரிசையாக தொடங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், சீனத் தேசிய பதக்கம் மற்றும் மதிப்புறு விருது ஆகியனவற்றுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, “சீன மக்கள் குடியரசின் பதக்கம்”, “நட்புறவுப் பத்தகம்”, “மதிப்புறு விருதுக்கான பதக்கம்” ஆகியவற்றை வழங்கி, முக்கிய உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், சீனாவுக்கு நீண்டகாலமாக ஆதரவு மற்றும் உதவியளித்து வருகின்ற சீன மக்களின் பழைய நண்பர்களும், நல்ல நண்பர்களும் இன்று விருதுகளைப் பெற்றுள்ளனர். சீன வளர்ச்சிக்கான அவர்களது பங்குகளுக்கு நான் மனமார்ந்த பாராட்டு தெரிவிக்கின்றேன்.

உலகின் பல்வேறு நாடுகளின் மக்களுடன் இணைந்து, மனிதக் குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தைக் கூட்டாக முன்னேற்றி, மேலும் இனிமையான உலகத்தை உருவாக்கச் சீனா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்