• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-18 21:35:55    
"Xibo" இனம்

cri

அப்போதைய சீனாவின் எல்லைப் பாதுகாப்பு நிர்மாணத்துக்கு அவர்கள் அருஞ்செயல் ஆற்றியுள்ளனர். இவ்வரலாற்றை, சிங்கியாங்கிலுள்ள Xibo இனத்தவர் அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். இதற்காகப் பெருமைப்படுகின்றனர். அப்போது சிங்கியாங்கிற்கு குடியேறிய Xibo இனத்தவரின் எண்ணிக்கை, தற்போது நாற்பதாயிரத்துக்கு அதிகமாகும். தவிரவும், Chabuchaer தன்னாட்சி மாவட்டம், அவர்களுக்குரியது. ஆண்டுதோறும் சீனச் சந்திர நாள்காட்டியின் படி ஏப்ரல் 18ந் நாள், அதாவது, அப்பொழுது அவர்களின் முன்னோடிகள் வடகிழக்கு சீனாவிலிருந்து புறப்பட்டு, சிங்கியாங்கிற்கு வந்த நாளன்று, சிங்கியாங்கிலுள்ள Xibo இனத்தவர் அனைவரும், பகட்டாக வண்ண வண்ணப் புத்தாடை அணிந்து, ஒன்று திரண்டு கொண்டாடுவர்.

சிங்கியாங்கிலுள்ள Xibo இன மக்கள், இது வரையிலும், தனிச்சிறப்பியல்புடைய பழக்க வழக்கங்களையும் மொழியையும் நிலைநிறுத்தியுள்ளனர். Xibo இன மொழி எழுத்து ஆய்வில் ஈடுபடும் Qi Che Shan இது குறித்து கூறியது:

இப்போது, நாடு முழுவதிலும் சுமார் இரண்டு லட்சம் Xibo இனத்தவர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், வடகிழக்கு சீனாவில் வாழ்கின்றனர். இருபது விழுக்காட்டினர் மட்டும் சிங்கியாங்கில் வசிக்கின்றனர். சிங்கியாங்கிலுள்ள Xibo இன மக்கள் பலருக்கு, விகுர் மொழி, கஜக்ஸ்தான் மொழி, ரஷிய மொழி, ஹான் இன மொழி உள்ளிட்ட பல மொழிகளும் தெரியும். மொழித் துறையில் அவர்கள் மேம்பாடு உடையவர்கள்.

"Xibo இனத்தின் மொழியும் எழுத்தும், சிங்கியாங்கிலுள்ள Xibo இன மக்களிடையே நிலைத்திருக்கின்றன. மஞ்சு மொழியைப் படிக்க வல்லவர், Xibo இனத்தவர் மட்டுமே. சிறப்புமிக்க பண்பாட்டு பாரம்பரியம் அவர்களுக்கு உண்டு. நாங்கள் செய்வது, இத்துறையிலான பணியாகும். Xibo இன மொழியையும் எழுத்தையும் காப்பாற்றுவதற்கு பணி புரிய விரும்புகின்றோம்." என்றார், அவர்.

சிங்கியாங்கின் Xibo இன மக்கள் கல்வியில் கவனம் செலுத்தி, விடா முயற்சியுடன் படிக்கின்றனர். சொந்த முயற்சி மூலம் பலர், மாபெரும் சாதனை பெற்றிருக்கின்றனர். அவர்களில், ரசிகர்களின் அன்புக்குரிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், Qi Che Shan போன்ற அறிஞர்களும் இருக்கின்றனர். வேறு சிலர், வணிகம் செய்யும் தொழில் முனைவோர்களாகவும், விளையாட்டு நட்சத்திரங்களாகவும் இருக்கின்றனர். வெவ்வேறான துறைகளிலும் Xibo இனத்தவர் சுறுசுறுப்பாக செயல்கின்றனர்.

1  2  3