Xibo இனத்தவர், குதிரை சவாரியிலும், அன்பு எய்வதிலும் தேர்ச்சி பெற்றவர்கள். 240 ஆண்டுகளுக்கு முன், எல்லையைக் காவல் புரிய சிங் வம்சகால அரசு, Xibo இனத்தவரை அனுப்பியதற்கு இது தான் காரணம். அந்தக்காலத்தில் ஓடும் குதிரை மீது இருந்த படியே நூறு மீட்டருக்குள் மூன்று அம்புகளைக் குறிதவராமல் விடக்கூடிய வல்லமை பெற்றவர்கள் தான் படையில் சேர முடியும்.
இன்றும், சிங்கியாங்கின் Chabuchaerயின் Xibo இனத் தன்னாட்சி மாவட்டத்தில் வாழ்கின்ற Xibo இன மக்கள், அன்பு விடுவதில் மிகவும் விருப்பம் கொள்கின்றனர். அன்பு எய்தல் என்பது, அவர்கள் மிகவும் விரும்பும் விளையாட்டு நிகழ்ச்சியாகும். இதற்காக தான், Chabuchaer மாவட்டம், "சீனாவின் அன்பு எய்தல் மாவட்டம்" என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றது. வேளாண் பணி இல்லாத நேரங்களில், அங்கு அன்பு எய்தல் போட்டி அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றது.
மிகவும் விறுவிறுப்பான அன்பு எய்தல் போட்டி, பொதுவாக, வசந்த விழா, சந்திர விழா, மேற்கு குடியேற்ற விழா போன்ற Xibo இனத்தின் பாரம்பரிய விழா நாட்களில் நடைபெறுகின்றது. அப்போது, நான்கு சிறிய துவாரங்கள் துளைக்கப்பட்ட, மாட்டு கொம்பினால் உருவான சிறப்பு அன்புகளைக் கொண்டு விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்துகொள்வர்.
"இ லி ஆறு", சிங்கியாங்கில் வாழ்கின்ற Xibo இன மக்கள் நன்கு அறிந்த நாட்டுப்புறப்பாடலாகும். தாம் வாழ்கின்ற நிலத்தின் மீது இவ்வினத்தவர் கொண்டுள்ள அன்பை இப்பாடல் வர்ணிக்கின்றது. சிங்கியாங்கின் Xibo இன பாடகி Guan Shu Xin இப்பாலைப்பாடுகின்றார். பெய்சிங் மத்திய தேசிய இனப்பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாகி, சிங்கியாங்கிற்குத் திரும்பிய அவர், தேசிய இனக் கலைக்கு தமது பங்கை ஆற்றுகின்றார். அவர் கூறியதாவது:
"தேசிய இனம், உலகத்துக்குரியது" என்ற வார்த்தையை நான் மிகவும் விரும்புகின்றேன். இசை, எல்லைக்கு அப்பால்பட்டது. தேசிய இனத்தின் தலைசிறந்த பண்பை வெளிப்படுத்தி, தேசிய இன இசையை மேலும் வளரச் செய்திட பாடுபடுவேன்" என்றார், அவர். 1 2 3
|