• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின் பொருளாதார வளர்ச்சி
  2012-09-28 19:10:48  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த சில ஆண்டுகளில், ஆயர்களின் குடியிருப்புத் திட்டப்பணியை செவ்வனே நடைமுறைப்படுத்தி, எரியாற்றல், சாலை, ஒலிபரப்பு மற்றும் ஒளிபரப்பு முதலிய அடிப்படை வசதிகளைத் திபெத் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது. கல்வி, மருத்துவச் சிகிச்சை, நலவாழ்வு முதலிய மக்கள் வாழக்கையோடு நெருங்கிய திட்டப்பணிகளில் முதலீடு செய்வதைத் திபெத் விரிவாக்கி வருகின்றது. அதனால், திபெத்தின் மேய்ச்சல் பிரதேசத்திலுள்ள உற்பத்தியிலும் வாழ்க்கை நிலைமையிலும் வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

திபெத்தின் மேய்ச்சல் பிரதேசத்திலுள்ள அடிப்படை வசதிகளின் நிலைமை பெரிதும் மேம்பட்டுள்ளது.

ஆயர்களுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கைகளின் மூலம், திபெத்தின் மேய்ச்சல் பிரதேசத்திலுள்ள சமூகத்தின் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் குறிப்பிட்ட பயன்கள் பெறப்பட்டுள்ளன. ஆயர்களின் உற்பத்தியிலும் வாழ்க்கை நிலைமையிலும் வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கட்சிக்குழுவின் துணைச் செயலாளர் சிங்பா புன்சோக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040