- கலை (2010-4-30 19:53:54):
சீன வானொலி நிலையம்.
- கிளீடஸ் (2010-4-30 19:54:07):
சீன வானொலி நிலையம்.
- கலை (2010-4-30 19:54:55):
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அதிகாரப்பூர்வமாகத் துவங்கும். பிரமாண்டமான துவக்க விழா பற்றி, சீன வானொலி இணையம், நேரடி சேவை முறையில், தாராள நிழற்படங்கள் மற்றும் கட்டுரைகளின் மூலம், உங்களுக்கு அறிவிக்கும்.
- கிளீடஸ் (2010-4-30 19:58:34):
நடப்பு உலகப் பொருட்காட்சி பன்னோக்க உலகப் பொருட்காட்சி என்ற முறையில் வளரும் நாடுகளில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இது சீனாவில் முதல்முறையாக நடைபெறுகின்றது. வெற்றிகரமான, செழுமையான, மறக்க முடியாத உலகப் பொருட்காட்சியை நடத்துவது சீன அரசு உலகத்திற்கு அளித்த கண்டிப்பான வாக்குறுதியாகும். 7 ஆண்டுகள் நீடித்திருந்த ஆயத்தக் காலகட்டத்தில் சீன அரசும் சீன மக்களும் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற இயன்றதனைத்தையும் செய்து பாடுபட்டுனர்.
- கலை (2010-4-30 20:00:52):
கருத்துக் கணிப்பின் படி ஷாங்காய் மாநகரில் வாழ்கின்ற 90 விழுக்காட்டுக்கு மேலான குடும்பங்கள் உலகப் பொருட்காட்சிக்குத் தன்னார்வத் தொண்டர் சேவையை வழங்கும் விருப்பத்தைத் தெரிவித்துள்ளன."உலகம் உங்கள் கண்களின் முன்னால் உள்ளது. நாங்கள் உங்கள் பக்கத்தில் இருக்கின்றோம்"என்பது ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்குச் சேவைபுரிகின்ற தன்னார்வத் தொண்டர்கள் முன்வைத்த உரத்த முழக்கமாகும். உலகப் பொருட்காட்சிக் காலத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வ தொண்டர்கள் பொருட்காட்சிப் பூங்காவிலும் நகரச் சேவை நிலையங்களிலும் சேவை புரிவர். நகர நாகரிகத்துக்கான சுமார் 5 லட்சம் தன்னார்வ தொண்டர்கள் ஷாங்காய் மாநகரில் எங்கெங்கும் விருந்தினர்களுக்குச் சேவை புரிவர்.
- கிளீடஸ் (2010-4-30 20:01:41):
உலகப் பொருட்காட்சியை நடத்துவது ஷாங்காய் மாநகரின் முக்கிய நடவடிக்கை மட்டுமல்ல சீன நாடு முழுவதன் நடவடிக்கையும் ஆகும். இதை செவ்வனே நடத்துவது ஷாங்காயுடையது மட்டுமல்ல நாடு முழுவதின் கடமையும் ஆகும் என்பதை சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வதற்காக வளரும் நாடுகளுக்கு சீன அரசு சிறப்பாக 10 கோடி அமெரிக்க டாலரை ஒதுக்கியுள்ளது.
- கலை (2010-4-30 20:01:59):
1851ம் ஆண்டு முதலாவது உலகப் பொருட்காட்சி தேம்ஸ் ஆற்றின் கரையிலுள்ள லண்டனில் நடைபெற்றது. இன்று வரலாற்றைக் கடந்து உலகப் பொருட்காட்சி ஹூவாங்பூஃ ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஷாங்காய் மாநகரில் நடைபெறுகின்றது. உலகில் மிகச் சிறந்தச் சிற்பிகளும் வடிவமைப்பாளர்களும் ஹூவாங்பூஃ ஆற்றின் கரையில் திரண்டு பெரும் கனவை உண்மையாக்கியுள்ளனர். மனிதரின் விவேகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடிவமைப்புகள் அவர்கள் அயராமல் உழைத்து உருவாக்கிய படைப்புகளில் முழுமையாக வெளிக்காட்டப்பட்டுள்ளன. வரும் 184 நாட்களில் இந்தப் படைப்புகள் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் 7 கோடிக்கு அதிகமான பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாகும்.
- கிளீடஸ் (2010-4-30 20:02:39):
நடப்பு உலகப் பொருட்காட்சிக்குப் பல தனிச்சிறப்பியல்ப்பான அம்சங்கள் உண்டு. நகரின் தலைசிறந்த நடைமுறை மண்டலம் முதல்முறையாக புத்தாக்கம் செய்யப்படுகின்றது. உலகில் பிரதிநிதித்துவத் தன்மை வாய்ந்த பெரிய நகரங்கள், நகரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மேற்கொண்டுள்ள முயற்சிகள் நடப்பு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் வெளிக்காட்டப்படும். உலகில் 50க்கும் அதிகமான நகர மாதிரிகள் நடப்புப் பொருட்காட்சியில் பார்வையாளர்களுக்கு காட்சிக்கு வைக்கப்படும். லண்டன் அரங்கில் கரியில்லா காட்சியகத்தில் எஞ்சிய சோறு மின்சார உற்பத்திக்கான எரியாற்றலாக பயன்படுத்த முடியும் என்பது விவரிக்கப்படும். ஹாம்பர்க் வீடு என்னும் அரங்கில் மின்சாரம், குளிர் காற்று, வெப்பக் காற்று ஆகியவற்றை சிறப்பு சாதனங்கள் வழியே பெறாத நிலையில் அரங்கின் உள்ளே வெப்ப நிலை 25 திகிரி செல்சியஸுக்கு நிலைநிறுத்தப்படும் அற்புதத்தை பார்வையாளர்கள் கண்டுணரலாம்.
- கலை (2010-4-30 20:03:14):
உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ள முடியாத மக்கள் "உலகப் பொருட்காட்சி குறிப்பு எனும் இணையதளத்தில்" நுழைந்தால் போதும். ஒரே சொக்கில் உலகப் பொருட்காட்சியில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் உணர்பை பெற முடியும். உடல் திறன் சவால் கொண்டவ பங்கு உலகப் பொருட்காட்சியின் வரலாற்றில் முதல்முறையாக "உயிர் சூரிய அரங்கில்" வெளிக்காட்டப்படுகின்றது. இதன் மூலம் சமூகம் முழுவதும் உடல் சவால் கொண்டோரின் அற்புதமான சாதனைகளை அறிந்து கொள்ளும். அவர்கள் மீது சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்பது இந்த "உயிர் சூரிய அரங்கில்" நிறுவியதன் நோக்கமாகும். ஒளியைப் பின்பற்றும் இசைக் கச்சேரியில் செவித் திறன் இழந்தோர் "மகிழ்ச்சி" என்னும் லுடுவிக் ஃவான் பேத்தோவன் இசையை உணரலாம்.
- கிளீடஸ் (2010-4-30 20:03:28):
இன்று முதல் ஹௌபாவின் உதவியுடன் மதிப்புக்குரிய விருந்தினர்கள் ஹூவாங்பூஃ ஆற்றின் இரு கரைகளில் நடைபெறும் பல்வகைப் பண்பாட்டு அரங்கேற்ற நடவடிக்கைகளைக் கண்டு ரசிப்பார்கள். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது 20 ஆயிரம் கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும். நாள்தோறும் 2 லட்சத்துக்கு அதிகமானோர் இந்தக் கலை நிகழ்ச்சி அரங்கேற்றங்களில் பங்கு ஆற்றுகின்றனர்.
- கலை (2010-4-30 20:03:56):
இன்றிரவு இத்தணை நாள் கனவுடன் உள்ளோர் எம்மோடு இணைந்து உலகப் பொருகாட்சியின் துவக்கத்தை எதிர்பார்க்கின்றனர். நாளை முதல் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் 7 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் நேரடியாக உலகப் பொருட்காட்சியில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வர். சீனாவின் விருந்தோம்பலையும் நட்பையும் உணர்ந்து மறக்க முடியாத 184 நாட்களைக் கழிப்பர்.
- கிளீடஸ் (2010-4-30 20:04:37):
இதுவே, உலகளவில் பிரம்மாண்டமான மாபெரும் விருந்தாகும். பல்வேறு இடங்களின் நண்பர்கள், ஷாங்காய் மாநகரத்துக்கு வந்து தங்கியுள்ளனர். ஹுவாங்பூஃ ஆற்றின் கரையில் அமைந்துள்ள உலகப் பொருட்காட்சிப் பூங்கா, புவிக் கிராமமாக மாறுகிறது. உலகில் மிகச் சிறிய நாடான சான் மரினோ நாட்டு நிலபரப்பளவில் மிகப் பெரிய நாடான ரஷியா, புவியின் தெற்கிலுள்ள அர்ஜென்டீனா, வடக்கில் உள்ள கனடா உள்ளிட்ட 189 நாடுகளும் 57 சர்வதேச நிறுவனங்களும் இதில் கலந்துகொள்கின்றன. சோமாலியா, வடகொரியா முதலிய நாடுகள் முதல் முறையாக உலகப் பொருட்காட்சியில் இப்போது கலந்துகொள்கின்றன என்று குறிப்பிடத்தக்கத்து.
- கலை (2010-4-30 20:05:17):
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி 2010ம் ஆண்டு மே திங்கள் முதல் நாள் அதிகாரப்பூர்வமாக துவங்கி, 184 நாட்கள் நீடிக்கும். "மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை" என்பது, அதன் தலைப்பாகும். இத்தலைப்பின் கீழ் நகரங்களின் பல்வகைப் பண்பாட்டு இணைப்பு, "நகரப் பொருளாதாரச் செழுமை", "நகர அறிவியல் தொழில் நுட்பத்தின் புத்தாக்கம்", "குடியிருப்பிடத்தின் மேம்பாடு", "நகரத்துக்கும் கிராமத்துக்குமிடை தொடர்பு" ஆகிய உள்ளடக்கங்கள் இடம்பெறுகின்றன. எதிர்கால நகர சுற்றுச்சூழலில் அருமையான வாழ்க்கைக்கான மனித குலத்தின் பொது ஆர்வமும், நகரமயமாக்கப் போக்கு, எதிர்கால நகர நெடுநோக்கு மற்றும் தொடரவல்ல வளர்ச்சியில் சர்வதேசச் சமூகம் செலுத்திய கவனமும், இப்பொருட்காட்சியின் தலைப்பு மூலம் எடுத்துக்காட்டப்பட்டன. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, புதிய நூற்றாண்டில் மனித குலத்தின் நகர வாழ்க்கையைப் பற்றி விவாதிக்கும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியாகும் என்று கூறலாம்.
- கிளீடஸ் (2010-4-30 20:06:01):
உலகப் பொருட்காட்சி வரலாற்றில், நகரத்தை தலைப்பாகக் கொள்வது, இதுவே முதல் முறையாகும். எனவே, ஷாங்காய் மாநகரம், இணக்க நகரம் என்ற தலைசிறந்த மாதிரியை உருவாக்க முயற்சி செய்யும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறும் காலத்தில், பல்வேறு நாடுகள், சர்வதேச அமைப்புகள், நகரங்கள், தொழில் நிறுவனங்கள் முதலிவை, நகர நாகரீகச் சாதனைகளை போதியளவில் எடுத்துக்காட்டி, வளர்ச்சி அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டு, முன்னேறிய நகர கருத்துக்களைப் பரவும். புதிய நூற்றாண்டில் மனிதரின் வசிப்பு, வாழ்க்கை மற்றும் பணிக்கு புதிய முறைமையைக் கண்டறிந்து, உயிரின இணக்க சமூகத்தின் உருவாக்கம், மனிதரின் தொடரவல்ல வளர்ச்சி ஆகியவற்றுக்கு அடிப்படை இடப்படும்.
- கலை (2010-4-30 20:06:16):
ஊதா பட்டுப்பூச்சி தீவு என்று அழைக்கப்பட்ட ஜப்பானிய அரங்கு, சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்னாற்றலை உற்பத்தி செய்துகொள்ளும். இவ்வரங்கத்தின் கூரையில் சில சிறப்பான வசதிகளின் மூலம், மழை நீர் சேகரிக்கப்பட்டு, மீண்டும் பயன்படுத்தப்படலாம். இதனால், விளக்கு மற்றும் காற்றுக் கட்டுப்பாட்டு வசதிகளின் எரியாற்றல் செலவு குறையும். பிரான்ஸ் அரங்கின் வெளித்தோற்றம் பார்க்க தோட்டம் காட்சியளிக்கிறது. பெரிய நகரங்களின் நிலைமையை எண்ணி, வடிவமைப்பாளர்கள் கட்டிட்தையும் இயற்கையையும் இணைத்து கருத்தில் கொண்டு வடிவமைத்தனர்.
- தொகுப்பவர் (2010-4-30 20:07:23):
2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா விரைவில் துவங்கும். இப்போது சீன வெளிநாட்டுத் தலைவர்கள் துவக்க விழாவில் கலந்து கொள்ளுங்கள்.
- தொகுப்பவர் (2010-4-30 20:07:38):
தாய்மார்களே பெரியர்களே. அனைவரும் எழுந்தி உளமார்ந்த கரவொலியுடன் அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவையும் உள்நாட்டு வெளிநாட்டு மதிப்புக்குரிய விருந்தினர்களையும் வரவேற்கின்றோம்.
- (2010-4-30 20:07:55)
புகழ் பெற்ற பாடகி சுங்சூயிங் பாடகர் ஜெக்கி சென் ஆகியோர் "இணக்கம்" என்னும் பாடலைப் பாடுகின்றனர்.
- தொகுப்பவர் (2010-4-30 20:10:58):
இன்றையத் துவக்க விழா, 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அமைப்புக் குழுவின் முதலாவது துணைத் தலைவர் யூச்செங்சாங்கின் தலைமையில் நடைபெறுகின்றது.
- யூச்செங்சாங் (2010-4-30 20:13:05):
தாய்மார்களே, பெரியவர்களே, சீனாவில் 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா இப்போது தொடங்கும். தயவு செய்து அனைவரும் எழுந்திருங்கள். சீன மக்கள் குடியரசின் தேசியக் கொடியை ஏற்றுக. சீன மக்கள் குடியரசின் தேசியப் பண் இசைக்க.
- யூச்செங்சாங் (2010-4-30 20:13:21):
சர்வதேசக் கண்காட்சி ஆணையத்தின் கொடியை ஏற்றுக. சர்வதேசக் கண்காட்சி ஆணையத்தின் இசையை முழங்குக
- யூச்செங்சாங் (2010-4-30 20:14:23):
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் கொடியை ஏற்றுக. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் இசையை முழங்குக.
- யூச்செங்சாங் (2010-4-30 20:15:13):
அமருங்கள். தயவு செய்து உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் தரப்புகள் கொடியை ஏந்தி துவக்க விழாவில் நுழையுக.
- யூச்செங்சாங் (2010-4-30 20:18:28):
இப்போது, சீன 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அமைப்புக் குழுவின் தலைவரும், சீனத் துணைத் தலைமையமைச்சருமான திரு.வாங்சிசான் உரை நிகழ்த்துவார்.
- வாங்சிசான்(2010-4-30 20:19:19):
இன்று அழகான ஷாங்காய் மாநகரில், நாம் உலகப் பொருட்காட்சியை கூட்டாக துவக்கினோம். மே முதல் நாள், 159 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட உலகப் பொருட்காட்சி வளரும் நாடொன்றில், குறிப்பாக சீனாவில் முதல்முறையாக நடைபெறுகின்றது.
- வாங்சிசான்(2010-4-30 20:19:53):
உலகப் பொருட்காட்சியின் உறுப்பு நாடுகளுக்கு நன்றிகள். தங்கள் தேர்வு, உலகப் பொருட்காட்சியை நடத்தும் ஆர்வத்தை சீன மக்கள் பெற துணை புரிந்தது. தொலை தூரகனவு இன்றைய உண்மையாகியுள்ளது.
- வாங்சிசான்(2010-4-30 20:20:01):
இந்த பொருட்காட்சியில் கலந்து கொண்ட 246 நாடுகள், சர்வதேதச அமைப்புகள், சீன மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் வெளிக்காட்டிய உற்சாகம், அறிவுத்திறன், புதுமை, சிறந்த வேலைப்பாடு ஆகியவற்றின் மூலம், அரங்குகள் உயிர் ஆற்றலை எடுத்துக்காட்டி, அமைதி, அன்பு மற்றும் வருப்பத்தை இயம்புகின்றன. இதற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
- வாங்சிசான்(2010-4-30 20:22:21):
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி தொடர்ந்து 6 திங்கள் காலம் நீடிக்கும். பன்முகச் சேவை, மனமார்ந்த புன்னகை ஆகியவை மூலம், சீனாவில் அனைத்து பார்வையாளர்களும் வெற்றிகரமான, திறமை வாய்ந்த உலகப் பொருட்காட்சியை உணர்ந்து கொள்ளலாம்.
- யூச்செங்சாங் (2010-4-30 20:23:13):
இப்போது, சர்வதேசக் கண்காட்சி ஆணையத்தின் தலைவர் திரு.லென்பாஃங் உரை நிகழ்த்துவார்.
- லென்பாஃங்(2010-4-30 20:23:39):
மதிப்புக்குரிய ஹுசிந்தாவ் தம்பதியினரே, தலைவர்களே, பிரதிநிதிகளே.
- லென்பாஃங்(2010-4-30 20:24:33):
நகரத்தை தலைப்பாகக் கொள்கின்ற 2010ம் ஆண்டின் உலகப் பொருட்காட்சி, ஷாங்காயில் நடைபெறுகிறது. மிக அதிக மக்கள் தொகை வாய்ந்த, நீண்ட வரலாறு மற்றும் பண்பாடு வாய்ந்த, முன்கண்டிராத நகர புரட்சியை நடத்தும் சீனாவில் இது நடைபெறுகிறது. இது குறித்து, நான் சர்வதேச கண்காட்சி ஆணையத்தின் சார்பில் மகிழ்ச்சி தெரிவிக்கிறேன்.
- லென்பாஃங்(2010-4-30 20:25:01):
இந்த கோலாகலமான உலகப் பொருட்காட்சி, 21ம் நூற்றாண்டின் சீனாவின் செழுமையை வெளிப்படுத்தும்.
- லென்பாஃங்(2010-4-30 20:25:47):
பல்வேறு நாடுகளின் காட்சி அரங்குகள் மற்றும் முதல்முறையில் இப்பொருட்காட்சியில் கட்டியமைக்கப்பட்ட நகரங்களின் சிறப்பு காட்சிப் பிரதேசங்களின் மூலம், சீனா, இப்பொருட்காட்சியை உலகளவிலான ஒரு மாபெரும் விழாவாக மாற்றும். கடைசியாக, செய்தித்தொடர்பு தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால், நிழற்பட மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் மூலம், சீனா, இப்பொருட்காட்சியை மாபெரும் கூட்டமாக மாற்றும்.
- லென்பாஃங்(2010-4-30 20:26:18):
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, பெரிய அளவு, நிறைந்த புத்தாக்க கருத்துக்கள், சீரான தலைப்பு முதலியவற்றைக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக, ஷாங்காய் மாநகர அரங்கின் தலைப்பான "நகரம்", மிலான் நகர அரங்கின் தலைப்பான"உயிரின் தோற்றுவாய்", lishui நகர அரங்கின் தலைப்பான"கடல்" முதலியவை, இதை வெளிப்படுத்துகின்றன. உலகப் பொருட்காட்சி, மென்மேலும் உற்சாகமாக மாறி வருகிறது என்று சர்வதேச கண்காட்சி ஆணையம் உணர்ந்துள்ளது. அதேவேளை, இப்பொருட்காட்சி, காலத்தின் வளர்ச்சி, பரிமாற்றம், போட்டி ஆகிய தேவைகளையும் நிறைவு செய்கிறது. இத்தேவை, விளையாட்டுப் போட்டியைத் தாண்டியது.
- லென்பாஃங்(2010-4-30 20:28:12):
எதிர்காலத்தில் உலகின் பெரும்பாலான மக்கள் நகருக்கு குடியேறுவர் என்பதை, "மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை" என்ற தலைப்பு காட்டுகிறது. அடுத்த சில பத்து ஆண்டுகளில், நகரவாசிகளின் தொகை சுமார் 300 கோடி அதிகரிக்கும். இது, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளின் நகரவாசிகளின் வாழ்க்கை நிலை முன்னேறச் செய்யும். மாசுபாடு, வறுமை, சமூக இடைவெளி, பாதுகாப்பற்ற நிலை முதலிய பிரச்சினைகளை அவர்கள் சமமாக எதிர்நோக்குவர். இப்பொருட்காட்சி மூலம் மேலும் நிலையான, சமமான, பாதுகாப்பான, இணக்கமான நகரத்தைக் கட்டியமைக்கும் உணர்வை மக்கள் உயர்த்துவர்.
2010 ஷாங்காய் உலகப் பொருட்காட்சி வெற்றி பெற நான் வாழ்த்துக்கிறேன்.
- யூச்செங்சாங் (2010-4-30 20:28:41):
இனி, சீன மக்கள் குடியரசின் தலைவர் ஹுசிந்தாவ் அவர்களே, சீன 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்கத்தை அறிவிக்க பெருமையுடன் அழைக்கின்றேன்.
- ஹுசிந்தாவ் (2010-4-30 20:29:03):
சீன 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, துவங்குகிறது.
- யூச்செங்சாங் (2010-4-30 20:31:42):
சீன 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா நிறைவடைந்தது. அடுத்து, தலைசிறந்த கலைநிகழ்ச்சிகளைப் பார்த்து ரசியுங்கள்.
- (2010-4-30 20:33:00)
கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும்.
- (2010-4-30 20:33:11)
இணக்கம் எனும் பாடல், பாடியவர் சோ ஹுவா ஜியன் முதலியோர்.
- (2010-4-30 20:34:28)
The Blue Danube இசை அரங்கேற்றம். இந்த இசை இசைக்கப்படும் போது யாஞ்சி ஆற்றின் பாடலுடைய ராகம் இணைக்கப்படுகின்றது. சீனாவின் தாய் ஆற்றின் மீதான மதிப்பும் பாராட்டும் இதில் வெளிக்காட்டப்படுகின்றது.
- (2010-4-30 20:43:08)
பாடல், மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை (Better City, Better Life)
- (2010-4-30 20:46:16)
இசைக் கருவியுடன் இணைந்து ஆடும் நடனம் அரங்கேற்றப்படும். "வீரம் நிறைந்த கொம்பு ஒலி"அரங்கேற்றம் நியூசிலாந்து கலைக் குழு.
- (2010-4-30 20:48:57)
"நட்சத்திரன்" ஜப்பானியர் Tanimura Shinji
- (2010-4-30 20:53:54)
"அன்பு" எனும் பாடல்.
தென்னாப்பிரிக்க சோவேட் இசைக் குழு
- (2010-4-30 20:57:30)
"இன்றிரவு யாரும் தூங்காதீர்"எனும் பாடல்
- (2010-4-30 21:00:46)
"உலகப் பொருட்காட்சிக்காக"எனும் நடனப் பாடல்
- தொகுப்பவர் (2010-4-30 21:10:18):
தொடர்ந்து, விளக்கு ஒளி, வான வேடிக்கை, ஒளி ஊற்றுகள் அரங்கேற்றம்.
- தொகுப்பவர் (2010-4-30 21:32:18):
முதல் பகுதி: உங்களுக்குச் சீனாவின் வரவேற்பு
- தொகுப்பவர் (2010-4-30 21:32:33):
ஆரம்பம்: முரசு இசை, புகழ் பெற்ற தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் படைப்பு. வண்ண லேசர் விளக்குகள் ஒளி வெண்ணம் பாய்ச்ச, பல வாண வேடிக்கைகள் இசைக்கு ஒத்தது போல் வெடித்து சிதறி கண்களுக்கு விருந்தாகின்றன.
- தொகுப்பவர் (2010-4-30 21:33:32):
முதல் தலைப்பு, நாகரிகத்தின் ஒளி
ஹுவாங் பூஃ ஆற்றின் இரு கரைகளில் எல்லோரும் கூடிருந்து, அழகான வாண வேடிக்கை நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கின்றனர்.
- தொகுப்பவர் (2010-4-30 21:34:10):
இரண்டாவது தலைப்பு, மேம்பட்ட நகரம் மேம்பட்ட வாழ்க்கை
இசை: டிராகன்
கிரேக்க இசை அமைப்பாளர் Vangelis அவர்களின் படைப்பு
- தொகுப்பவர் (2010-4-30 21:35:42):
மூன்றாவது தலைப்பு, நகரத்தின் இசை
இசை: பாதைச் சந்திப்பு
சீன இசை அமைப்பாளர் சாவ் குவாங்கின் படைப்பு
- தொகுப்பவர் (2010-4-30 21:39:00):
இரண்டாவது பகுதி: உலகப் பொருட்காட்சியில் மகிழ்ச்சியாகக் கூடியிருப்பது
- தொகுப்பவர் (2010-4-30 21:39:08):
ஆரம்பம்: இசை, உலகப் பொருட்காட்சியில் கூடியிருப்பது
- தொகுப்பவர் (2010-4-30 21:42:50):
முதல் தலைப்பு, ஒரே உலகம், ஒரே தாயகம்
இசை: லியாங் சான் போ மற்றும் ஜூயிங் தாய் என்னும் சீனாவின் புகழ்பெற்ற இசை. சென் காங் மற்றும் ஹெ ச்சன்ஹாவ் படைப்பு.
- தொகுப்பவர் (2010-4-30 21:44:31):
இரண்டாவது தலைப்பு, உயிரின் நீர்
இசை:The Blue Danube
ஆஸ்திரிய இசையமைப்பாளர் Johann Baptist Strauss அவர்களின் படைப்பு. 1867ம் ஆண்டு பாரிஸ் உலகப் பொருட்காட்சியில் வழங்கப்பட்ட புகழ்பெற்ற இசை யாகும்
- தொகுப்பவர் (2010-4-30 21:47:56):
மூன்றாவது பகுதி: மகிழ்ச்சியான உலகம்
உலகில் பல இசையமைப்பாளர்கள் இயற்றிய மகிழ்ச்சியான இசைகள் உங்களுக்காக.
- தொகுப்பவர் (2010-4-30 21:57:42):
இறுதி இசை: Ode to Joy
ஜெர்மனி இசையமைப்பாளர், லுடுவிக் ஃவான் பேத்தோவன் அவர்களின் படைப்பு.
இத்துடன், சீன2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் விளக்கு ஒளி, வாண வேடிக்கை, ஒளி ஊற்றுகள் ஆகியவற்றைக் கொண்ட பெரியரக கலைநிகழ்ச்சி நிறைவடைந்தது.
- கலை (2010-4-30 22:09:20):
இதோடு, சீன வானொலி தமிழ் பிரிவின் நேரடி அறிவிப்பு நிறைவடைந்தது.
- கிளீடஸ் (2010-4-30 22:09:35):
நிகழ்ச்சியைக் கண்டுகளித்ததற்கு நன்றி.
- கலை (2010-4-30 22:10:03):
வணக்கம்.
- கிளீடஸ் (2010-4-30 22:10:14):
வணக்கம்.