<![CDATA[#Episode4 காரமிக்க சுவைமிக்க ஹாட் பாட்!]]>

சோங்சிங், சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாநகரம் ஆகும். கடந்த சில ஆண்டுகளில்,  அதிசயமான கட்டிடங்கள், வியக்க வைக்கும் விதவிதமான போக்குவரத்து வசதி,  அழகிய இரவுக் காட்சி, “ஹாட் பாட்” உணவு  உள்ளிட்டவற்றால், சோங்சிங் மாநகரம், சீனாவின் சமூக வலைதளங்கில் மிகவும் பிரபலமாகியுள்ளது. அதோடு, ஆண்டுதோறும் அதிக அதிக சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகிறது.  மேலும்,  2015ஆம் ஆண்டு,  சோங்சிங் மற்றும் சென்னை ஆகியவை,  நட்பு நகரங்களாக(சகோதரி நகரங்கள்) இணைந்துள்ளன.

ஹாட்பாட் நகரம் என்ற பெருமை பெறுகிறது சோங்சிங்.  இந்த மாநகரில் எங்கெங்கும் ஹாட்பாட் உணவகங்கள் காணப்படும்.  ஹாட்பாட், சோங்சிங்கின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும்.  தேன்மொழி மற்றும் இலக்கியாவுடன் இணைந்து,  ஹாட்பாட் தயாரிப்பது எப்படி என்ற கேள்வியுடன் இந்த காணொலியை கண்டு ரசியுங்கள்..  

]]>