மால்வினாஸ் தீவுகள் போர்: 40ஆவது ஆண்டு நிறைவு
2022-04-02 18:32:56

19ஆவது நூற்றாண்டு முதல், அர்ஜென்டீனாவின் மால்வினாஸ் தீவுகள் பிரிட்டனின் காலனி ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் நாள் தீவுகளை மீட்கும் விதம் பிரிட்டனுக்கும் அர்ஜென்டீனாவுக்கும் போர் மூண்டது. 74நாட்கள் நீடித்த போரில் பிரிட்டன் வெற்றி பெற்றது. இவ்வாண்டு ஏப்ரல் 2ஆம் நாள் மால்வினாஸ் தீவுகள் போர் நடைபெற்ற 40ஆவது ஆண்டு நிறைவாகும். போர் முடிந்தாலும், அர்ஜென்டீன மக்கள், குறிப்பாக போரில் போராடிய அர்ஜென்டீன படையின் மூத்த வீரர்களுக்கு அது ஒருபோதும் மறக்க முடியாத நினைவு ஆகும்.

அர்ஜென்டினா குடியரசின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரமோன் லோபெஸ் கூறுகையில், நம் நாட்டைப் பல்முறை ஆக்கிரமித்த பிரிட்டன் மீது அனைத்து அர்ஜென்டீன மக்களுக்கும் வருத்தம் நிறைந்துள்ளது. தற்போது கூட, மால்வினாஸ் தீவுகள் பிரிட்டனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. தீவுகளை மீண்டும் மீட்கும் விதம், 190ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். ஆனால், பிரிட்டனின் கட்டுப்பாட்டிலுள்ள மால்வினாஸ் தீவுகளுக்கு அர்ஜென்டீன குடிமக்கள் வெளிநாட்டுக்குச் செல்வதைப் போல கடவுச்சீட்டு பயன்படுத்த தேவைப்படுக்கின்றனர்.

மால்வினாஸ் தீவுகள் போர் முழு லத்தீன் அமெரிக்கப் பிரதேசத்துக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலாதிக்கவாதத்தைப் பின்பற்றும் இந்த ஏகாதிபத்திய நாடுகள் பிற நாட்டு மக்கள் மற்றும் இறையாண்மை மீது ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை. முக்கியமான நிலத்தைக் கைப்பற்றுவதில் மட்டும் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று அர்ஜென்டினா குடியரசின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கூட்டமைப்பின் செயலாளர் ஜுவான் கார்லோஸ் சோசா கூறினார்.