சீன-நேபாள நட்பார்ந்த உறவு
2022-04-09 16:54:18

சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டித் தலைவர் லீ ட்சான்ஷு, ஏப்ரல் 8ஆம் நாள் பெய்ஜிங்கிலிருந்து காணொளி வழியாக, நேபாளப் பிரதிநிதிகள் அவை தலைவர் சப்கோடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

லீ ட்சான்ஷு கூறுகையில், நேபாளத்துடன் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, இரு நாட்டுத் தலைவர்கள் உருவாக்கிய முக்கிய பொது கருத்துக்களைச் செவ்வனே செயல்படுத்தி, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய சீனா விரும்புகிறது. முதலாவதாக, அரசியல் ரீதியில் ஒன்றுக்கொன்று ஆதரவை வலுப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, கோவிட்-19 பரவல் தடுப்பு உள்ளிட்ட மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புகளை ஆழமாக்க வேண்டும். மூன்றாவதாக, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் கூட்டாக ஈடுபட வேண்டும். நான்காவதாக, பலதரப்புத் துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

சப்கோடா கூறுகையில், ஒரே சீனா என்ற கொள்கையை நேபாளம் உறுதியுடன் பின்பற்றி வருகிறது. சீன தேசிய மக்கள் பேரவையுடன் நட்பார்ந்தப் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற நேபாளப் பிரதிநிதிகள் அவை விரும்புவதாகத் தெரிவித்தார்.