புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை:ஜெலென்ஸ்கி
2022-04-10 16:39:10

உக்ரைன் அரசுத் தலைவர் ஜெலென்ஸ்கி 9ஆம் நாள் கூறுகையில், உக்ரைனுக்கு வேறு தேர்வு இல்லாத நிலையில் ரஷிய அரசுத் தலைவர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். அதேநாள் உக்ரைன் தலைநகர் கிவ் சென்றடைந்த பிரிட்டன் தலைமை அமைச்சர் ஜான்சன் கூறுகையில், உக்ரைனுக்கு தேவையான பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவுகளை பிரிட்டன் இயன்ற அளவில் வழங்கும் என்று தெரிவித்தார்.

மேலும், உக்ரைன் பொருளாதாரத் துறையின் துணை அமைச்சர் 9ஆம் நாள் கூறுகையில், உக்ரைன் மீதான ரஷியாவின் இராணுவ நடவடிக்கை, உலகளவில் 25 விழுக்காடு தாணிய உணவு வர்த்தகத்தைப் பாதிக்கும் அதேவேளை, கடும் பின்விளைவையும் ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.