நேட்டோவைப் பயன்படுத்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் அமெரிக்கா
2022-04-14 18:46:48

ஜெர்மனியின் ஜங் வெல்ட் நாளேடு ஏப்ரல் 7ஆம் நாள் தனது இணையத்தளத்தில், “மேற்கு நாடுகளுக்கு எதிரான உலக அரசியல்”என்னும் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அமெரிக்கா, நேட்டோ அமைப்பைப் பயன்படுத்தி, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளைத் தாக்கி, தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் சமூக அறிஞரும் படைப்பாளருமான வான் ஜார்க் குரோனர் இக்கட்டுரையை எழுதினார். அவர் இக்கட்டுரையில் தெரிவிக்கையில், நேட்டோ அமைப்பின் கிழக்கு விரிவாக்க நடவடிக்கையுடன், நேட்டோவின் பிரதேசங்களை விரிவாக்குவது, ஐரோப்பாவின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் ரஷியாவின் செல்வாக்கைக் குறைப்பது ஆகிய திட்டங்களைத் தவிர, அமெரிக்காவுக்கு மேலும் வேறு நோக்கங்கள் உண்டு என்று தெரிவித்தார்.