அமெரிக்கா பழைய ஒழுங்கை மீட்டெடுக்கும் செயலுக்கு வளரும் நாடுகளின் எதிர்ப்பு
2022-04-14 18:57:16

புதிய சர்வதேச ஒழுங்கு குறித்து அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கருத்து வேற்றுமை என்ற தலைப்பில் கடனாவின் ஆசிய-பசிபிக் நிதியத்தின் சிறப்பு ஆய்வாளர் ருபா சுப்ரமணியன் எழுதிய கட்டுரை 10ஆம் நாள் ஜப்பானிய பொருளாதாரச் செய்தியேட்டில் வெளியிடப்பட்டது.

அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் மார்ச் மாதத்தில் கூறுகையில், புதிய சர்வதேச ஒழுங்கின் பிறப்புக்கு தலைமை தாங்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அண்மையில் கூறுகையில், புதிய சர்வதேச ஒழுங்கில் இந்தியா வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் தலைமையில் மேலை நாடுகள் கட்டுப்படுத்தும் ஒழுங்கை உருவாக்குவது பைடனின் விருப்பம். ஆனால், இந்தியா உள்ளிட்ட புதிதாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் பார்வையில், இத்தகைய ஒழுங்கு, 2ஆவது உலகப் போரின் எச்சமாகும். பைடன் மீட்டெடுக்க விரும்பும் பழைய ஒழுங்கை இந்த நாடுகள் பார்க்க விரும்பவில்லை என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.