சீன விண்வெளி இலட்சியத்திற்கான ஷி ச்சின்பிங்கின் ஊக்கம்
2022-04-14 20:17:22

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுத் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், 12ஆம் நாள் சீன ஹெய்நான் மாநிலத்தின் வென் சாங் விண்கலன் ஏவு தளத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டு  தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்.

இத்தளத்தின் அடிப்படை நிலைமை, திட்டங்களைச் செயல்படுத்திய நிலைமை, எதிர்கால வளர்ச்சி திட்டம் ஆகியவற்றை ஷி ச்சின்பிங் அறிந்து கொண்டு, ஏவு கருவிகளைச் பார்வையிட்டார். அவர்கள் எட்டியுள்ள சாதனைகளுக்கு ஷி ச்சின்பிங் பாராட்டு தெரிவித்தார்.

சீனா விண்வெளி நிலையத்தின் ஆக்கப்பணி இவ்வாண்டில் நிறைவடையும். தொடர்புடைய ஏவு பணி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உத்தரவாதம் அளித்து, நடைமுறை நடவடிக்கைகளின் மூலம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டை வரவேற்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.