சீன-மோரிஷ்ஸ் அரசுத் தலைவர்களின் வாழ்த்து செய்திகள்
2022-04-15 18:30:33

ஏப்ரல் 15ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், மோரிஷ்ஸ் அரசுத் தலைவர் லுபாங்கும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பி, இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடினர்.

மோரிஷ்ஸுடனான உறவில் நான் உயர்வாக கவனம் செலுத்தி வருகிறேன். லுபாங்குடன் இணைந்து, இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு, நட்புறவை ஆழமாக்கி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பை விரிவாக்கி, கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற விரும்புகிறேன் என்று ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.

கடந்த 50 ஆண்டுகளில் இரு நாடுகள் பல்வேறு துறைகளில் ஒத்துழைத்து வருகின்றன. தாராள வர்த்தக உடன்படிக்கையின் நடைமுறையாக்கம், நெருக்கமான இரு நாட்டுறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று லுபாங் தெரிவித்தார்.