ரஷிய எண்ணெய் கொள்வனவை அதிகரிக்க இந்தியா திட்டம்
2022-04-20 17:33:47

இந்தியாவின் இக்னாமிக்ஸ் டைம்ஸ் நாளேடு வெளியிட்ட தகவலின்படி, இந்திய அரசு சார் எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் நிறுவனங்கள், இயன்றளவில் ரஷிய எண்ணெயைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளன. அதே வேளை, மேலதிக சலுகையைப் பெறும் வகையில், ஏலம் மூலம் விடும் முறையை, நீண்டகால ஒப்பந்த ஒத்துழைப்பாக மாற்றக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய-உக்ரைன் மோதலுக்குப் பின், இந்திய அரசு சார் எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் ரஷியாவிலிருந்து, டாலர் பணப்பரிவர்த்தணை மூலம், 1.5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.