புதிய யுகத்தில் சீன இளைஞர்கள் என்ற வெள்ளையறிக்கை வெளியீடு
2022-04-21 16:30:43

சீன அரசவை தகவல் தொடர்பு பணியகம் 21ஆம் நாள், புதிய யுகத்தின் சீன இளைஞர்கள் என்ற வெள்ளையறிக்கையை வெளியிட்டது. இளைஞர்களுக்கான சீனாவின் முதல் வெள்ளையறிக்கை, இதுவாகும்.

சீனத் தேசிய இனத்தின் தலைசிறந்த வளர்ச்சி காலத்தில் வாழ்ந்து வரும் இளைஞர்கள், மிகுந்த அறிவு மற்றும் பன்முக வளர்ச்சி அடைந்து வருகின்றனர். அவர்கள், வாழ் நாள் முழுவதும் போராடும் பழக்கத்தில் ஊன்றி நின்று, சொந்தக் கடமைகளை நிறைவேற்றி, புத்தாக்கத் தொழிலில் முன்னேற்றங்களைப் படைத்து வருகின்றனர். இதற்கிடையில், திறந்த மனம் கொண்டு உலகத்துடன் ஒன்றிணைந்து, பன்னாட்டு இளைஞர்களுடனான ஒத்துழைப்பில், சீன இளைஞர்கள், அமைதி, வளர்ச்சி, நேர்மை, நியாயம், ஜனநாயகம், சுதந்திரம் முதலிய மனித குலத்தின் பொதுக் கருத்துகளை வெளிக்கொணர்ந்து வருகின்றனர் என்று இவ்வெள்ளையறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதில், பன்னாட்டு இளைஞர்களிடம், உலகளாவிய நடவடிக்கைகளுக்கான 4 முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.